tamilnadu

img

தொழிலாளர் வர்க்கம் என்ற உணர்வை அரசு ஊழியர்கள் பெற வேண்டும்!

தொழிலாளர் வர்க்கம் என்ற உணர்வை அரசு ஊழியர்கள் பெற வேண்டும்!

திருப்பூர், நவ. 8 - “நாம் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு  பகுதியே என்ற உணர்வை அரசு ஊழியர்கள்  பெற வேண்டும், இன்றைய ஆட்சியாளர்களின்  கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டும்”  என்று அகில இந்திய, மாநில அரசு ஊழியர் கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ. ஸ்ரீகுமார் கூறினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில  பிரதிநிதித்துவப் பேரவை திருப்பூர் சு. சிவக் குமார் அரங்கில் (ஹார்வி குமாரசாமி மண்ட பம்) சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரதிநிதித்துவப் பேரவை யில், மாநிலத் துணைத்தலைவர் ஆ. அம்ச ராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக்குழுத் தலைவர் அ. நிசார் அகமது வரவேற்றார். அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ. ஸ்ரீகுமார் தொடக்கவுரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், “அரசு ஊழி யர்களான நாம், சம்பள கமிஷன், டி ஏ, பதவி  உயர்வு, இதர பல படிகள், ஓய்வூதியம் ஆகிய வற்றைப் பற்றி கவலைப்படுகிறோம். ஆனால்  தற்போதைய ஆளும் அரசாங்கத்தை புரிந்து  கொள்ள வேண்டும். இந்த அரசு கார்ப்ப ரேட்டுகள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட  மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறது. மோடி அரசு பின்பற்றும் இந்துத்துவா கொள்கை என்பது உயர்சாதியினருக்கு மட்டுமே  அதிகாரம் என்பதாகும். இதர சாதியினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள், சிறுபான்மை யினருக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே  அதன் அர்த்தம்.  அரசு ஊழியர்கள், தொழிலாளி வர்க்கத் தின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ள  வேண்டும். இந்த உணர்வு பெறாமல், அரசி யல் புரிதல் இல்லாமல், நாம் நம்மை பாதுகாத்துக்  கொள்ள முடியாது. அரசியல் உணர்வு பெறா மல், நாம் நமது கோரிக்கைகளை முன்வைப்பதால் மட்டும் வெற்றி பெற முடி யாது. அரசின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மத வாத கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசு ஊழி யர்களில் சரி பாதிக்கு மேலானவர்களை நமது  சங்க உறுப்பினர்களாக சேர்ப்பதன் மூலம் தான்  பெரும்பான்மைச் சங்கம் என்று சொல்ல முடி யும். கடந்த காலத்தில் மேற்கொண்ட பணி களை சுய பரிசோதனை செய்து சங்கத்தின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும்.  இவ்வாறு ஸ்ரீகுமார் பேசினார்.