tamilnadu

img

“பாஜக 400 இடங்களை வென்றிருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மாறியிருக்கும்”

புதுதில்லி பாஜக 400 இடங்களை வென்றிருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மாறியிருக்கும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.  இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறுகையில்,”2024 மக்க ளவைத் தேர்தலில் 400 இடங்களை கடந்து அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக நம்பி யது. ஆனால் அது நடக்கவில்லை. பாஜக 400 இடங்களில் வென்றி ருந்தால் இந்நேரம்  அரசியலமை ப்புச் சட்டம் மட்டும் மாறியிருக் காது; ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படமும் மாறி யிருக்கும். மகாத்மா காந்தியை இருட்டடிப்புச் செய்ய பாஜக படிப்படியாக சதி செய்து வரு கிறது. அதனால் தான் அம்பேத்கர்  மற்றும் மகாத்மா காந்தி ஆகியோ ரின் பாரம்பரியத்தை போற்ற முடிவு செய்துள்ளோம். இந்த நாடு அரசியலமைப்புச் சட்டத்தால் மட்டுமே நடத்தப்படும். அரசியல மைப்புச் சட்டம் மற்றும் மனுஸ்மி ருதி என இரண்டையும் வைத்துக் கொண்டு பாஜக ஒரு போதும் அலைய முடியாது” என அவர் கூறினார்.