tamilnadu

அமெரிக்கா புறக்கணித்த நிலையிலும் ஜி20 மாநாடு தீர்மானம் நிறைவேற்றம்!

அமெரிக்கா புறக்கணித்த நிலையிலும் ஜி20 மாநாடு தீர்மானம் நிறைவேற்றம்!

ஜோகன்னஸ்பர்க், நவ.22-  தென்னாப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. இது ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் ஜி-20 மாநாடாகும்.  இம்மாநாட்டில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்து வது; உலகளவில்  உள்ள ஏழை பணக்காரனுக்கான இடை வெளியை குறைப்பது; சுற்றுச்சூழலுக்குப் பாதிப் பில்லாத ‘பசுமை எரிசக்திக்கு’ மாறுதல்; ஏழை நாடுகள்  தங்கள் மண்ணில் உள்ள கனிம வளங்களை தாங்களே  பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்வது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புறக்கணித்த  நிலையிலும், ஜி-20 உச்சி மாநாட்டில் தலைவர்கள் அனை வரும் மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதாக, தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடி பங்கேற்பு முன்னதாக, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையன்று தென் ஆப்பிரிக்கா சென்றார். மாநாட்டில் பேசிய அவர்,  உலகளாவிய வளர்ச்சிக்கான அளவுகோல்கள் குறித்து  மீண்டும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்; போதைப் பொருள் - பயங்கரவாதத்திற்கு இடையே உள்ள தொடர்பை தடுக்க ஜி-20 அமைப்பு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்; உலகளாவிய சுகாதார நெருக்கடி களுக்குப் பதிலளிக்கும் வகையில் செயல்பட ஒரு சர்வ தேச சுகாதார மீட்புக் குழுவை ஜி-20 நாடுகள் அமைக்க  வேண்டும் என்று வலியுறுத்தினார்.