tamilnadu

img

பால்கர் வெற்றியைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அடுத்த போராட்டம் நாசிக்கில் 40,000 பேர் நடைபயணம் பேச்சுவார்த்தைக்கு மகாராஷ்டிரா பாஜக அரசு அழைப்பு

பால்கர் வெற்றியைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அடுத்த போராட்டம் நாசிக்கில் 40,000 பேர் நடைபயணம் பேச்சுவார்த்தைக்கு மகாராஷ்டிரா பாஜக அரசு அழைப்பு

மும்பை மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில், வாதவன் மற்றும் முர்பே துறைமுகத் திட்டங்களை ரத்து செய்தல்  ; சாகுபடி செய்பவர்களுக்கு நில உரிமை வழங்குதல்; மக்கள் விரோத ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மாபெரும் நடைபயணம் நடைபெற்றது. தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடி மக்கள், பெண்கள் மற்றும் இளை ஞர்கள் என பால்கர் மாவட்டத்தின் 8 தாலுகாக்க ளிலிருந்து சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் ஜன., 19 முதல் 55 கிமீ தூரத்திற்கு நடைபெற்ற நடைபயணத்தில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 7 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின், சிபிஎம் கோரிக்கையை ஏற்ற பால்கர் மாவட்ட ஆட்சியர் காலக்கெடுவுடன் கூடிய எழுத்துப் பூர்வ உறுதிமொழிகளை வழங்கினார். இதனால் ஜனவரி 21 அன்று நள்ளிரவில் ஆயிரக்கணக் கான மக்களின் உற்சாகமான வெற்றி கொண்டாட் டங்களுக்கு மத்தியில், போராட்டத்தை தற்காலி கமாக வாபஸ் (மாநில அரசு கோரிக்கைக்கு மட்டும் ; ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு அல்ல) பெறுவதாக சிபிஎம் தலைவர்கள் அறிவித்தனர். 40,000 பேர் இந்நிலையில், பால்கர் வெற்றியைத் தொடர்ந்து, நாசிக்கிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசா யிகள் சங்கம் (ஏஐகேஎஸ்) தலைமையில் ஜனவரி 25 அன்று மாபெரும் நடைபயணம் தொடங்கியது. வன உரிமைச் சட்டம், பெசா தொ டர்பான முந்தைய வாக்குறுதிகளை நிறை வேற்றாமை, மந்த நிலையில் நீர்ப்பாசனத் திட்டங்கள், மாவட்ட ஊராட்சி பள்ளிகளில் காலி யாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்க ளை நிரப்புதல் மற்றும் பால்கர் நடைபய ணத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மும்பையை நோக்கி செல்லும் இந்த நடைபயணத்தில் 40,000 பேர் பங்கேற்றனர். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரும், ஏஐகேஎஸ் தேசிய தலைவருமான டாக்டர் அசோக் தாவ்லே, சிபிஎம் மாநிலச் செயலாளர் டாக்டர் அஜித் நவாலே, ஏஐகேஎஸ் மாநிலத் தலைவர் உமேஷ் தேஷ்முக், சிபிஎம் மூத்த தலைவர் ஜே.பி. காவித், மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் டி.எல். காரட், நாசிக் மாவட்டச் செயலாளர் இந்திரஜித் காவித் ஆகிய தலைவர்கள் இந்த நடைபயணத்தை முன்னின்று நடத்துகின்றனர். முதல்வரிடம் மட்டுமே பேச்சுவார்த்தை குடியரசுத் தினவிழாவிற்கு இணையாக நாசிக் நடைபயணம் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஆதரவு மழையுடன் வைரலா னது. இந்த ஆதரவைக் கண்டு பதற்றம டைந்த மகாராஷ்டிரா பாஜக அரசு திங்க ளன்று போராட்டக் குழுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளை மேற் கொண்டது. ஆனால் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிபிஎம் - ஏஐகேஎஸ் தூதுக்குழுவை நேரில் சந்தித்து போராட்டத்தின் கோரிக்கை களை ஏற்கும் வரை நடைபயண பேரணி தொடரும். வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என தலைவர்கள் திட்ட வட்டமாக தெரிவித்தனர். கசாரா மலைப்பாதையில்... கடந்த 2 நாட்களில் சுமார் 60 கி.மீ தூரத்தைக் கடந்து, செவ்வாய்க்கிழமை அன்று காலை கசாரா மலைப்பாதையில் நடைபயணம் இறங்கியது. அதாவது நாசிக் மாவட்டத்தைக் கடந்து தானே மாவட்டத்திற்குள் நுழைந்தது. பால்கர் போராட்டத்தை முன்னின்று நடத்திய சிபிஎம் தலைவர்களான வினோத் நிகோலே எம்எல்ஏ, கிரண் காஹலா உள்ளிட்ட தலை வர்கள் நடைபயணத்தில் இணைந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை மும்பையில் உள்ள மந்திராலயாவில் முதல மைச்சர், அமைச்சர் குழுவுடன் ஆலோசனை நடத்த சிபிஎம் - ஏஐகேஎஸ் நடைபயண தலை மை குழுவிற்கு மகாராஷ்டிரா பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. சிபிஎம் - ஏஐகேஎஸ் பேச்சுவார்த்தைக் குழுவில் டாக்டர் அசோக் தாவ்லே, டாக்டர் அஜித் நவாலே, ஜே.பி. காவித், வினோத் நிகோலே (எம்எல்ஏ), உமேஷ் தேஷ்முக், இந்திரஜித் காவித் என 12 தலை வர்கள் இடம்பெற்றுள்ளனர்.