மதுரை
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது 2-ஆம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 3-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் தமிழகத்தில் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கு போலீசார் விலக்கு அளிக்கின்றனர். மற்ற நேரங்களிலோ அல்லது அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றினால் வழக்கு பதிவு செய்து அபராதத்துடன் போலீசார் வாகனத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும், இனி இ - பாஸ் இருந்தால் மட்டுமே வாகனம் இயக்கமுடியும் என அறிவிப்பு (?) வெளியானது. வாகனங்களைக் குறிப்பிட்ட வேளைகளில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் இ-பாஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (வெளியன்று) வழங்கப்படும் எனத் தகவல் வெளியானது. இந்த இ-பாஸ் பெற மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் குவிந்தனர். திருவிழா போல் அதிகளவில் கூட்டம் கூடியதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் மூடப்பட்டது.