பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
உடுமலை, ஜன.11- திருமூர்த்திமலையி லுள்ள பஞ்சலிங்க அருவி யில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடு மலை அருகேயுள்ள திரு மூர்த்திமலை பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரை யில் அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பல்வேறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரு விக்கு முக்கிய நீராதாரமாக உள்ள மேல்குரு மலை பகுதியில், பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் கோவில் வளாகத்தை சூழ்ந்துள்ளதால், அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர் கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர் கண் காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்ற னர்.
