உதிரிபாகங்கள் கடையில் தீ விபத்து
கோவை, ஜன.23- கோவை காட்டூர் பகு தியில் உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ஏற் பட்ட பயங்கர தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவில் செயல் பட்டு வரும் இந்த உதிரி பாகங்கள் கடையில் வெள்ளியன்று மாலை திடீரென தீ பிடித்தது. கடையில் இருந்த பொருட் கள் எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதால், தீ மள மளவென அடுத்தடுத்த பகுதிகளுக்குப் பரவியது. கடைக்கு மிக அருகிலேயே குடியிருப்புகள் அமைந் துள்ளதால், தீயானது மெல்ல மெல்ல குடியிருப்புப் பகுதிகளுக்கும் தொற்றத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்ச மடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், அப்பகுதி மக்களும் இணைந்து தண் ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த வீதி யில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது டன், பரபரப்பான சூழல் நிலவியது. நீண்ட போராட்டத் திற்கு பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர ப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இச்சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை தள்ளிவிட்டு செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக காவல்துறை உதவி ஆணையர் முரட்டுத்தன மாக ஊடகவியலாளர்களிடம் நடந்து கொண்ட சம்ப வத்திற்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
