புதிர் விளையாட்டில் விடை கண்டுபிடிப்பது உற்சாகமான பொழுதுபோக்கு, அதே வேளையில் அது மூளைக்குச் சிறப்பான பயிற்சி. விடையை முதலிலேயே பார்ப்பதில்லை என்ற உறுதியோடு கண்டுபிடிக்க முயற்சி செய்வது இன்பமான ஓர் அனுபவம்.
அது
என்ன கேள்வி?
வீட்டுக்கு வந்த விருந்தினர் தன் எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறார். அவரும் அதற்கு பதில் சொல்கிறார். பின்னர் விருந்தினர் இன்னொருவரிடம் அதே கேள்வியைக் கேட்கிறார். அவர் பதில் சொல்கிறார். ஆனால் அது முதலில் சொன்னவர் கூறிய பதிலிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. அப்புறம் மூன்றாவதாக ஒருவரிடம் அதே கேள்வியைக் கேட்க, அவரும் வேறு பதிலைச் சொல்கிறார். இப்படி அன்று காலை முதல் மாலை வரையில் பலரிடம் ஒரே கேள்வியைக் கேட்டாலும், ஒவ்வொருவரும் ஒருமாறுபட்ட பதிலையே சொல்கிறார்கள். ஆனால், ஒரே மாதிரியாக இல்லை என்றாலும், எல்லாமே சரியான பதில்கள் தான். அப்படியானால் அந்தக் கேள்வி என்ன?