2025-26ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமையன்று (பிப்.1) தாக்கல் செய்கிறார். தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெயரை அவர் பெறுகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ஆம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-இல் தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, பேரிடர் மேலாண்மை சட்டத் திருத்த மசோதா, எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா உள்பட 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய ஒன்றிய பாஜக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.