tamilnadu

img

பிப். 12 - பொது வேலைநிறுத்தம் - மறியலை தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்!

பிப். 12 - பொது வேலைநிறுத்தம் - மறியலை  தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்!

திருச்சி, ஜன. 23 - நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் மீதும்,  இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் ஜன நாயக விழுமியங்களின் மீதும் ஒன்றிய பாஜக அரசு தொடுத்துள்ள இடைவிடாத தாக்குதல் களை முறியடிக்க பிப்ரவரி 12 அன்று  அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தம் - மறியலை தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்வோம் என்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவ சாயிகள் முன்னணியும் அறிவித்துள்ளன. தொமுச (எல்பிஎப்), சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) தலைவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, திருச்சி ராப்பள்ளி தென்னூர் உழவர் சந்தையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.  எல்பிஎப் அகில இந்திய தலைவர் கி. நடராஜன், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ. சவுந்தரராசன், மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம். மூர்த்தி, எச்.எம்.எஸ். மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணி, ஐஎன்டியுசி மாநில துணைத்தலைவர் டி.வி. சேவியர், ஏஐசிசிடியு மாநிலப் பொதுச்செயலாளர் க. ஞானதேசிகன், எல்எல்எப் மாநிலப் பேரவை அமைப்பாளர் க.பேரறிவாளன், யுடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் அ. சேக்கிழார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) மாநில ஒருங்கிணைப்பாளர் க. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், விவசாயத்  தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் மாரியப்பன், ஏஐயுடிசிவி சிவக்குமார், டியுசிசி எஸ்.மாயாண்டி, எம்எல்எப் இரா. அந்திரிதாஸ்,  டபிள்யூபிடியுசி சம்பத் ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர். அணுமின் உற்பத்தியில் தனியார் நிறு வனங்களை அனுமதிக்கும் ‘ஷாந்தி - 2025 (SHANTI Bill, 2025)’ எனப்படும் அணுமின் உற்பத்தி மசோதா, மின் விநியோகத்தை முற்றிலும் தனி யாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா- 2025, நான்கு தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, காப்பீட்டுத் துறையில் 100 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீட்டை அனு மதிக்கும் சட்ட மசோதா ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், மசோதாக்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அத்துடன், இந்த கோரிக்கைகளை முன் வைத்து, பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தத்தை தமிழகத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்வோம் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக, தொமுச மாவட்டச் செய லாளர் ஜோசப் நெல்சன் வரவேற்புரை ஆற்றினார்.  எல்பிஎப் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஜோசப் நெல்சன், குணசேகரன், சிஐடியு நிர்வாகி கள் ரங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், எஸ்கேஎம் சிவசூரியன், ஏஐசிசிடியு அருண்குமார், எச்எம்எஸ் ஞானதுரை, ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், எல்எல்எப் விஜய் பாலு, யுடியுசி சிவசெல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.            (ந.நி.)