tamilnadu

img

ரத்தமும், சதையுமாக வாழ்ந்தவர் ஃபாத்திமா..!

ரத்தமும், சதையுமாக வாழ்ந்தவர் ஃபாத்திமா..!

டிசம்பர் 5, 2023. ஒரு பழைய கட்டடத்தை புனே மாநகராட்சி ஊழியர்கள் இடித்துக் கொண்டிருந்தார்கள். “ஆபத்தானது மற்றும் பாதுகாப்பற்றது” என்று வரையறுக்கப்பட்ட கட்டடங்களின் பட்டியலில் இதுவும் இடம் பெற்றிருந்தது. இடிக்கப்படும்போது அந்த வழியில் போவோர், வருவோரும் வழக்கமான பணியாகத்தான் அதைப் பார்த்தார்கள். ஆனால் அந்தக் கட்டடம் இடிக்கப்படுவதைக் கேள்விப்பட்டு, நாடு முழுவதும் இருந்து வலுவான எதிர்க் கருத்துகள் வந்தபிறகுதான் எப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டடம் அது என்று பெரும்பாலான உள்ளூர்வாசிகளே புருவத்தை உயர்த்திப் பார்த்தனர்.

புனேயின் பிடேவாடா பகுதியில் உள்ள இந்தக்  கட்டடத்தில்தான் ஜனவரி 1, 1848 அன்று பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. ஜோதிராவ் பூலே- சாவித்திரிபாய் பூலே இணையர்தான் இந்தப் பள்ளி யைத் தொடங்கினர். இந்த வரலாற்று சிறப்புமிக்க பள்ளி  இருந்த இடத்தைத் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் கண்டு கொள்ளாமல் விட்டன. வரலாற்றாய்வாளர்கள், சமூக ஆர்வலர்களின் பராமரிப்புக் கோரிக்கைகள் புறக்க ணிக்கப்பட்டன. இந்தக் கட்டடத்தைப் பராமரித்திருந்தால் இடிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. கடுமை யான கண்டனங்கள் குவிந்ததால் நினைவகம் கட்டப் போகி றோம் என்று கூறினார்கள். ஃபாத்திமாவின் களப்பணி  இந்தக் கட்டடத்தில் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு ஆதாரமாக இருந்தவர்கள் ஃபாத்திமா ஷேக்கும், அவரது  சகோதரர் உஸ்மான் ஷேக்கும்தான். ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று பூலே இணை யறையை சொந்தக் குடும்பமே வெளியேற்றியபோது, அவர்கள் ஆற்ற விரும்பிய பணிக்கு இவர்கள் இருவரும் கைகொடுத்தனர். தங்கள் இடத்தில் பள்ளியை அமைத்துக்  கொள்ள அனுமதித்தனர். அதோடு ஃபாத்திமா ஷேக்  நிற்கவில்லை. புனே நகரத்திலும், அருகில் உள்ள கிராமங்க ளிலும் வீடு வீடாகச் சென்று பெண் குழந்தைகளைப் பள்ளிக்  கூடத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்ற பல குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளைப் படிப்பதற்காக அனுப்பி வைத்தனர்.  இதன்பிறகு, மேலும் திறக்கப்பட்ட பள்ளிகளிலும் அவற்றைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சாவித்திரி பாய் பூலேவுடன் இணைந்து ஃபாத்திமாவும் ஏற்றுக் கொண்  டார். சாவித்திரிபாய் பூலேவைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாகப் பல்வேறு புத்தகங்கள், ஆவ ணங்கள், அவரே எழுதிய நூல்கள் எல்லாம் உள்ளன. அத்தகைய பதிவுகள் எதுவும் ஃபாத்திமா ஷேக்கைப் பற்றிப் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இதைப் பயன்  படுத்திக் கொண்டு ஃபாத்திமா ஷேக் என்ற ஒருவரே இல்லை. அது வெறும் கற்பனைப் பாத்திரம் என்ற பிரச்சா ரத்தை வலதுசாரி சக்திகளும், மதவெறி அமைப்புகளும் கட்டவிழ்த்துவிட்டன. “நானே பிரம்மா” இதில் திலிப் மண்டல் என்ற பத்திரிகையாளரோ, ஃபாத்திமா ஷேக்கைப் படைத்த பிரம்மாவே நான்தான் என்று ஒரு உருட்டு உருட்டியிருக்கிறார். இவர், சமூகப்  போராட்டங்களையும், பல்வேறு சீர்திருத்த முன்னோடி களையும் பதிவு செய்வதில் நல்ல பங்களிப்பு செய்து  வந்தவராவார். ஜனவரி 9, 2019 அன்று “தி பிரிண்ட்”  இணைய தளத்தில் “ ஏன் ஃபாத்திமா ஷேக்கை இந்திய வர லாறு மறந்துவிட்டது, ஆனால் சாவித்திரிபாய் பூலேவை  நினைவில் வைத்துள்ளது” என்ற தலைப்பில் ஒரு கட்டு ரையை எழுதினார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரே ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். ஃபாத்திமா  ஷேக் என்று ஒருவர் கிடையவே கிடையாது. வெறும் கற்ப னைப் பாத்திரம்தான். நானே அந்தப் பாத்திரத்தைப் படைத்தேன் என்று ஒரு பதிவைப் போட்டார். அவர் இப்படிப் போட்டவுடன், அவர் எழுதிய கட்டுரை யைத் தனது இணைய தளத்தில் இருந்து தி பிரிண்ட் அகற்றி விட்டது. மதவெறி அரசியலுக்கு உதவும் வகை யில் பல்வேறு ஊடகங்கள் திலிப் மண்டலின் பதிவுக்கு முக்கியத்துவம் தந்தன. ஒரு இஸ்லாமியப் பெண், இந்தி யாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை உருவாக்கு வதில் பங்களிப்புச் செய்தார் என்ற உண்மையை மதவெறி யர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சமூக சீர்திருத்தவாதிகள் பற்றித் தொடர்ந்து எழுதி வந்த திலிப் மண்டலைத் தங்கள் பக்கம் இழுத்தார்கள். பொய்ப் பிரச்சாரத்துக்கு தை அவர் மூலம் நம்பகத்தன்மை கொடுக்க முயற்சித்தனர். ஆதாரத் தரவுகள் ஆனால், சமூக ஆர்வலர்கள் இந்தப் பொய்ப்பிரச்சா ரத்திற்குப் பதிலடி கொடுத்தனர்.  1.     ஆறாம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டு வரையிலான பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வை  சுசி தாரு, கே. லலிதா ஆகிய இருவரும் நடத்தினர். அதில் ஒரு அத்தியாயம் சாவித்திரி புலே பற்றியது. அந்த அத்தியாயத்தில் சாவித்திபாய் பூலேயின் சகா வாக ஃபாத்திமா ஷேக் குறிப்பிடப்படுகிறார். 2.     1856 ஆம் ஆண்டில் சாவித்திரிபாய் பூலே உடல் நலன்  குன்றி, தனது பெற்றோர்களின் வீட்டுக்குச் செல்லும்  வரையில் தொடர்ந்து ஃபாத்திமா ஷேக்குடன் இணை ந்து பள்ளிக்கூடங்களில் பாடங்களை நடத்தியி ருக்கிறார் என்பதை சுசி தாருவும் கே.லலிதாவும் குறிப்பிடுகிறார்கள். 3.     1856 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று தனது  கணவர் ஜோதிராவ் பூலேவுக்கு எழுதிய கடிதத்தில்  “ஃபாத்திமா ஷேக்குக்கு பெரும் சிரமம் ஏற்பட்டி ருக்கும். ஆனால் அவள் புரிந்து கொள்வாள் என்று உறுதியாக இருக்கிறேன்” என்று சாவித்திரிபாய் பூலே எழுதுகிறார். 4.     சாவித்திரிபாய் பூலேயின் வரலாற்றை 1980 இல்  பதிவு செய்த எம்.ஜி. மாலியின் நூலிலும், அவரு டைய பணிகளுக்குப் பெரும் பங்களித்தவர்களில் ஒரு வராக ஃபாத்திமா ஷேக்கைக் குறிப்பிடுகிறார். 5.     எம்.ஜி.மாலியின் மற்றொரு நூலான “சாவித்திரிபாய் பூலே - சமாக்ர வாங்மயா”, ஃபாத்திமா ஷேக்கின் புகைப்படத்தைத் தாங்கி பிரசுரமாகியுள்ளது. தங்கள்  பள்ளிக்குழந்தைகளுடன் சாவித்திரிபாய் பூலே மற்றும் ஃபாத்திமா ஷேக் என்று அந்தப் புகைப் படத்தின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 6.     பள்ளிகளை நிர்வகிப்பதில் சாவித்திரிபாய் பூலே வுக்கு அடுத்த இடத்தில் ஃபாத்திமா இருந்தார். சாவித்திரிக்கு உடல்நலன் குன்றியபோது, தலைமை  ஆசிரியராக ஃபாத்திமா பொறுப்பேற்றுக் கொண்டார்  என்கிறார் ரீட்டா ராமமூர்ததி குப்தா.  வெறும் வேலைக்காரி, ஃபாத்திமா கிறித்தவர் என்பது  உள்ளிட்ட அவதூறுகளை மதவெறியர்கள் கிளப்பி விட்டுக்  கொண்டே இருக்கிறார்கள். ஆனால், 19ஆம் நூற்றாண்டின்  மையப்பகுதியில் நடந்த சமூக சீர்திருத்தப் பணிகளை ஆய்வு செய்பவர்கள் ஃபாத்திமா ஷேக்கின் இருப்பை உறுதிப்படுத்துகிறார்கள். அவர் நம்மோடு ரத்தமும், சதை யுமாக வாழ்ந்து, மறைந்தவர். அவரது பணிகள் இவ்வளவு  காலமாக மறைக்கப்பட்டு வந்தது. தற்போது அவரையே மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர் மீதான வெளிச்சம் அதிகமாகியே வருகிறது