tamilnadu

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் அவதி மழையில் நனைந்து முளைக்கும் நெல் மூட்டை!

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் அவதி மழையில் நனைந்து முளைக்கும் நெல் மூட்டை!

மதுரை, அக்.22– மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால், 5,000 மூட்டைகளுக்கும் மேல் நெல் குவிந்து மழையில் நனைந்து வீணாகும் நிலை  ஏற்பட்டுள்ளது. சோழவந்தான், கருப்பட்டி, இரும்பாடி, பொம்மன்  பட்டி, அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயி கள் பெருமளவில் நெல் பயிரிட்டுள்ளனர். ஆனால், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து பெய்த மழையால் நெல் உற்பத்தி பகுதிகள் நீரில் மூழ்கி,  அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வெளியில் குவிந்து மழையில் நனைந்து வருகின்றன. விவசாயிகள் கூறுகையில், “மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டும், இன்னும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வில்லை. நாங்கள் உழைத்த நெல் மழையில் நனைந்து  முளைக்கத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் நெல் துர்நாற்றம் வீசும் அளவுக்கு சேதமடைந்துள்ளது. இதை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது” என  அவர்கள் வேதனை தெரிவித்தனர். வாடிப்பட்டி வட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால்,  நெல் மூட்டைகளை விவசாயிகள் வெளியில் உலர்த்தி காயவைக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொம்மன்பட்டி கிராமத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள்  மழையில் நனைந்துள்ளதாக தெரி கிறது. இதே நிலை கருப்பட்டி, இரும்பாடி, போடிநாயக் கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நிலவுகிறது. விவசாயிகள் கோரிக்கை “உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, மழையில் நனைந்த நெல்களை குடோன் களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையெனில், உழைப்பின் பலனே மொத்தமாக வீணாகி விடும்” என வேதனை தெரிவித்தனர்.