டிச.4 தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், டிச.1- தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் டிச.4 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. இதில், கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து, ஒப்புதல் பெற்ற பின் அளிக்க வேண்டும். எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெற்றிடுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, அய்யம்பேட்டையை அடுத்த சக்கராப் பள்ளியில் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் மாடுகள் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இடையூறாக உள்ளன. வாகன ஓட்டிகள் மாடுகள் நிற்பதை கவனிக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடும் அபாயம் உள்ளது. மாடுகளை சாலைகளில் விடும், அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
