220 ஏக்கர் அரசு நிலத்தை மீட்கக்கோரி மானாமதுரையில் விவசாயிகள் சங்கம்- கிராம மக்கள் மறியல் விஏஓ புகாரால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு
சிவகங்கை, டிச.19- 100 கோடி ரூபாய் மதிப்பு ள்ள அரசு சொத்தை மீட்டெ டுத்து விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் கிராம மக்கள் டிசம்பர் 19 அன்று சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் வீரபாண்டி கூறுகையில், மானாமதுரை வட்டம், மாங் குளம் குரூப், பணிக்க னேந்தல் கிராம சர்வே எண் 262 கண்மாய் மலைநீர் வரத்துப் பகுதியான ஆடு, மாடு மேய்ச்சல் தளமான அரசு புன்செய் நிலத்தை வெளியூரைச் சேர்ந்த 67 நபர்களுக்கு சட்ட விரோத மாக அசெயன்மென்ட் பட்டா கொடுத்ததை கிராமத்தின் சார்பாக போராட்டங்கள் நடத்தி கடந்த 2006 ஆம் ஆண்டு ரத்து செய்யப் பட்டது. இதனை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மானாமதுரை வேதிய ரேந்தல் சாலையில் நடை பெற்ற மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வீர பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆண்டி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் முனிய ராஜ், கிளைச் செயலாளர் ராமமூர்த்தி, கிராமத்தின் சார்பாக தமிழ்ச்செல்வி, யசோதை, சத்யா ,பூமா உட்பட திரளான மக்கள் பங்கேற்றனர். மானாமதுரை வட்டாட் சியர் கிருஷ்ணகுமார், காவல்துறை சார்பு ஆய்வா ளர் குகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காளி முத்து ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஆக்கிமிப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியு றுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
