tamilnadu

அயோத்தியிலும் காசியிலும் மதவெறித் தீயை விசிறிவிடுதல்

அயோத்தியிலும் காசியிலும் மதவெறித் தீயை விசிறிவிடுதல்

அயோத்தி மற்றும் காசி பிரச்சனை கள் மீண்டும் வெளிவரத் தொடங்கி யிருப்பது வினோதமாகும். இந்தப் பிரச்சனைகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகளால் இதுநாள்வரையிலும் இவை கிளறப்படாமல் இருந்தன. பாபர் மசூதியை இடித்த கிரிமினல்பேர்வழிகளிடமே அதே இடத்தில் ராமர் கோவிலைக் கட்ட வசதி செய்துகொடுத்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பானது பலருக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலைத் திறந்து வைக்கும்போது இந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடிக்கோடிட்டுக் கூறியதைப் பார்த்தோம். இதற்கு முற்றிலும் நேர்மாறாக,  இது தொடர்பாக உச்சநீதிமன்றம் ‘ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் நீதி வழங்கவில்லை’ என்று நாம் தெளிவாகக் கூற வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது, முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் இந்தப் பிரச்சனையை மீண்டும் எழுப்பியுள்ளார். செப்டம்பர் 24 அன்று வெளியிடப்பட்ட நியூஸ் லாண்ட்ரியில் ஸ்ரீனிவாசன் ஜெயின் அளித்த பேட்டியில்,  சந்திரசூட், “தொல்பொருள் அகழ்வாராய்ச்சியி லிருந்து போதுமான சான்றுகள் இருந்தன.  இப்போது, ஒரு தொல்பொருள் அகழ்வாராய்ச் சியின் ஆதார மதிப்பு என்ன என்பது முற்றிலும் ஒரு தனி பிரச்சனை. நான் உண்மையில் சொல்ல விரும்புவது என்னவெனில், தொல் பொருள் அறிக்கையின் வடிவத்தில் சான்று கள் இருந்தன என்பதேயாகும்” என்று கூறி யிருக்கிறார்.

உள்முற்ற அவமதிப்பு  சட்டவிரோதச் செயல்

ஜெயின் கேட்ட கேள்விக்கே முன்னாள் தலைமை நீதிபதி இவ்வாறு சர்ச்சைக்குரிய பதில் அளித்திருக்கிறார்.  “(மசூதியின்) உள் முற்றம் சர்ச்சைக்குரியது என்ற கருத்து, இந்துக்களும் அவமதிப்பு மற்றும் தொந்தரவு போன்ற சட்டவிரோத செயல்களைச் செய்ததன் விளைவாகும்; முஸ்லிம்கள் வெளிப்புற முற்றத்தில் அதைச் செய்யவில்லை, அவர்கள் அதை எதிர்க்க வில்லை. இருப்பினும் அவர்களைத் தண்டிக்க கிட்டத்தட்ட இதுவே காரணமாகிறது. இந்துக்கள் சண்டையிட்டாலும், முஸ்லிம்களாகிய நீங்கள் சண்டையிடவில்லை என்பது உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கணிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் ஒரு விமர்சன வாசிப்பாகும்.”

இதற்குப் பதிலளித்த சந்திரசூட், “உள் முற்றத்தை இழிவுபடுத்தியது இந்துக்கள்தான் என்று நீங்கள் சொன்னபோது, அடிப்படை அவமதிப்புச் செயலைப் பற்றி, மசூதியைக் கட்டியெழுப்புவது பற்றி, என்ன சொல்ல வேண்டும்? நடந்த அனைத்தையும் நீங்கள் மறந்துவிட்டீர்களா? வரலாற்றில் என்ன  நடந்தது என்பதை நாம் மறந்துவிடுகிறோமா?” என்று கேட்டிருக்கிறார். நீதித்துறை தீர்ப்புகள், குறிப்பாக உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள், கரடுமுரடான விளிம்புகளை மறைக்க நுட்பமான நுணுக்கங்களுடன் எவரும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாதவாறு எழுதப்படுகின்றன. நீதிபதிகளால் தானாக முன்வந்து விளக்கப்படாவிட்டால், மற்ற வர்களால் அவற்றை ஒருபோதும் அறியமுடி யாது, புரிந்துகொள்ளவும் முடியாது. அயோத்தி தொடர்பான தீர்ப்பு இதற்கு சரியான உதாரணமாகும். 

இந்து கோவில் இடிக்கப்பட்டதா என்பது குறித்து தொல்லியல் அறிக்கையில் எதுவும் இல்லை

நீதிபதி சந்திரசூட் நேர்காணலில் கூறியது, தொல்பொருள் கண்டுபிடிப்புகள் தொடர்பாக தீர்ப்பின் உரை என்ன சொல்கிறதோ அதற்கு முற்றிலும் முரணானது. “அந்த இடத்தில் காணப்படும் கட்டிடக்கலை துண்டுகள் மற்றும் அது ஓர் இந்து மத வம்சாவளியைச் சேர்ந்தது என்பதற்கான கட்டமைப்பின் தன்மை ஆகிய வற்றின் அடிப்படையில் அறிக்கை முடிவடை கிறது. அடிப்படை கட்டமைப்பு இஸ்லாமிய வம்சாவளியைச் சேர்ந்ததாக இருப்பதற்கான சாத்தியத்தை (சன்னி மத்திய வக்ப் வாரி யத்தால் வலியுறுத்தப்பட்டது) அறிக்கை நிராக ரிக்கிறது. ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கை அதற்கு வழங்கப்பட்ட ஒரு முக்கியமான பகுதிக்கு பதில ளிக்கவில்லை, அதாவது, மசூதி கட்டுவதற்கு வழி வகுக்க ஒரு இந்து கோவில் இடிக்கப்பட்டதா என்பது குறித்து அது எதுவும் கூறவில்லை.

கோவில் அழிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் முடிவுக்கு வரவில்லை

“இந்தக் கட்டத்தில் தலைப்பு பற்றிய கேள்வி மதிப்பீடு செய்யப்படும்போது மற்றொரு அம்சமும் கவனிக்கப்பட வேண்டும். அது என்னவென்றால், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை கண்டுபிடிப்புகளின் அடிப்ப டையில் தலைப்பு நிர்ணயம் இருக்க முடியுமா என்பதுதான். 450 ஆண்டுகளுக்கு முந்தைய, அதாவது கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய, கி.பி.1528இல் கட்டப்பட்ட,  பழைய மதக் கட்டமைப்பின் அஸ்தி வாரங்களில் ஒரு மசூதி கட்டப்பட்டிருந்தது என்ற கேள்வி எழுப்பி, ஒரு முடிவை ஏற்படுத்த முடியுமா என்பதேயாகும். இந்தப் பிரச்ச னையானது, இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் அதிகார வரம்பெல்லைக்குள் வராது என்பதைக் கவனத்தில் கொள்வதே போதுமானதாகும். இந்தத் தீர்ப்பில் பின்னர் தலைப்பு பிரச்சனையை கையாளும் போது நீதிமன்றம் ஒரு பரிசீலிக்கப்பட்ட மற்றும் புற நிலை முடிவை எடுக்க வேண்டிய ஒரு விஷயம் இது” என்று அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, நீதிபதி சந்திரசூட், “தொல்பொருள் அகழ்வாராய்ச்சியிலிருந்து போதுமான சான்றுகள் இருந்தன” என்று நேர்காணலில் இப்போது வலியுறுத்துவது போல், ‘ஒரு மசூதி கட்டுவதற்காக, ஒரு கோவில் அழிக்கப்பட்டது’ என்ற தீர்க்கமான முடிவுக்கு உச்சநீதிமன்றம் ஒருபோதும் வரவில்லை.

அகழ்வாய்வு அனுமதியில்  சுய முரண்பாடு

காசியில் உள்ள ஞான வாபி மசூதி இடத்தில் அகழ்வாராய்ச்சியை அனுமதிப்பதில் உள்ள வெட்கக்கேடான சுய முரண்பாட்டில், ‘மதக் கட்டமைப்பின் தன்மையை விசாரிக்க முடியும், ஆனால் அதை மாற்ற முடியாது’ என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் வெளிச்சத்தில், அயோத்தியைத் தவிர, வேறு எந்த மதத் தலமும் சட்ட சவாலுக்குத் திறந்திருக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு மற்ற தளங்க ளுடன் தொடர்புடைய சர்ச்சை, வெறுப்பு மற்றும் வன்முறைக்கு வழி வகுத்துள்ளது.

நியூஸ் லாண்ட்ரி நேர்காணல் பகிரங்கமாகி விட்டதிலிருந்து, எல்லாமே உடைந்து போ யுள்ளன. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, நீதிபதி சந்திரசூட்டின் பங்கு, குறிப்பாக ஆர்எஸ் எஸ்-பாஜக அரசியல் ரீதியாக ஆதாயம் அடைந்ததாகத் தோன்றும் விதத்தில் அவர் அளித்த தீர்ப்புகள், இப்போது விவாதத்திற்கு மீண்டும் வந்துள்ளன.

தீர்ப்புகள் சட்டங்களை நிலைநிறுத்தவில்லை

சந்தேகத்திற்கு இடமின்றி, இது தவிர்க்க முடியாதது. இந்திய அரசு அடைந்துள்ள மாற்றத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள ஆர்எஸ்எஸ் தலை மையிலான பாஜக ஆட்சி கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறி உறவை அடிப்படை யாகக் கொண்டது. இதன் செயல்பாடுகள் ஜன நாயக மதச்சார்பற்ற குடியரசை அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு இது அரித்து வீழ்த்திடும் நடவடிக்கைகள் அரசு  நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற/சட்டமன்ற நடவடிக்கைகளுடன் மட்டும் இருந்துவிட வில்லை என்பதும், அது நீதித்துறையையும் உள்ளடக்கி இருக்கிறது என்பதும் தெளி வாகி இருக்கிறது. அயோத்தி அல்லது ஞான வாபி தொடர்பான தீர்ப்புகள் நம் அரச மைப்புச்சட்டத்தின் கொள்கைகள் மற்றும் நாட்டின் சட்டங்களை அடிப்படையில் நிலை நிறுத்தவில்லை என்பது துரதிர்ஷ்டவசமாகும்.