பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஆந்திராவில் 6 பேர் பலி
ஆந்திராவின் கோனசீமா மாவட்டத் தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் தீக்காயமடைந்த தொழிலா ளர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளி யிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர விபத்தில் பல உயிர்கள் இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக் கான காரணங்கள், தற்போதைய நிலைமை, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவி குறித்து அதி காரிகளுடன் பேசியுள்ளேன். பாதிக்கப் பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.