வேதியியலுக்கான நோபல் பரிசு
வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமு கிடகவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான ஆய்வுக்காக இந்த மூவ ருக்கும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. சுசுமு கிடகவா ஜப்பானில் உள்ள கியாட்டோ பல்கலைக்கழகத்தில் பேரா சிரியராகப் பணிபுரிகிறார். ரிச்சர்ட் ராப்சன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஒமர் எம்.யாகி அமெரிக்காவின் கலிஃ போர்னியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றி வரு கிறார்கள்.