ரயில் முன்பதிவு டிக்கெட் தேதி மாற்றிக்கொள்ளும் முறை அறிமுகம்
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், பயணத் தேதியை மாற்ற வேண்டுமானால் அந்த டிக்கெட் டை ரத்து செய்துவிட்டு புதிதாக முன் பதிவு செய்ய வேண்டிய நிலையே தற்போது உள்ளது. இந்நிலையில் 2026 ஜனவரி மாதம் முதல் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் ரயில்வேயில் ஆன்லைன் மூலமாக பய ணத் தேதியை மாற்றம் செய்து கொள்ள லாம் என கூறப்பட்டுள்ளது. இதனை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மாற்றப்படும் தேதிக்கான ரயில் கட்டணம் அதிகமாக இருந்தால், அதற் கான வித்தியாசத் தொகையை மட்டும் செலுத்த வேண்டும் என்றும் வேறு கூடுதல் கட்டணங்கள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.