states

img

காலணி வீசிய வழக்கறிஞர் மீது

காலணி வீசிய வழக்கறிஞர் மீது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீசி  தாக்க முயற்சி செய்தார். அவர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.  இது குறித்து அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணிக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அக்கடி தத்தில் நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் காலணி வீச முயன்ற செயலானது உச்ச  நீதிமன்றத்தின் கண்ணியத்தை சீர் குலைக்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மனுத் தாக்கலும் செய்துள்ளார்.