states

img

பிரிட்டன் பிரதமர் தலைமையில் பெரு நிறுவனங்களின் குழு இந்தியா வருகை

பிரிட்டன் பிரதமர் தலைமையில் பெரு நிறுவனங்களின் குழு இந்தியா வருகை

புதுதில்லி இந்தியா-பிரிட்டனுக்கு இடையே தடை யற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தா னதை தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தங்களை மேற் கொள்ள 125 பேர் கொண்ட குழுவுடன் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் இந்தியா (மும்பை) வந்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவரது குழுவில் பிரிட்டன் தொழில் அதிபர்கள், அதிகாரிகள், மதுபானம், கார் உற்பத்தி, தொழில் நுட்பத் துறைகளை சேர்ந்த பிரிட்டன் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs), பல்கலைக்கழகங்கள், தொழில் குழுமங்களின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.    இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரிட்டன் சென்ற போது அந்நாட்டு பிரத மர் ஸ்டார்மருடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டார். மூன்று ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப் பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னணியில் தற்போது அந்நாட்டு நிறுவனங்கள், இந்தியச் சந்தையில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முனைப்பில் பல வர்த்தக ஒப்பந்தங்க ளை இந்திய நிறுவனங்களுடன் இந்த சந்திப் பில் மேற்கொள்ள உள்ளன.  பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச அரசியல் விவகாரங்கள் மற்றும் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே முன்னெ டுக்கப்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்பு முயற்சி உள்ளிட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.   இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்ட னில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கான வரியை நீக்கி யுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக   பிரிட்டன் மதுபான நிறுவனங்களின் மதுபா னங்கள் அதிகளவில் இந்திய சந்தையில் விற்ப னையாகும். இதனால் இந்த ஒப்பந்தத்தை ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டன் மதுபான நிறுவ னங்களுக்கு பெரும் வெற்றி என ஸ்காட்லாந்துக் கான வெளியுறவுத் துறை செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர் கூறியுள்ளார். அதேபோல இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவுடன் தீவிர வணிக உறவுகளை முதலீட்டை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம் என கோப்ரா பீர் நிறுவன முதலாளியும் இங்கி லாந்து பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான கரண் பில்லிமோரியா கூறியுள்ளார். பிரிட்டனின் 11 ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கான பிரிட்டனின் ஏற்று மதியை 60 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிரிட்டனில் குறைந்த உற்பத்தித் திறன், அதிகக் கடன், பொருளாதார தேக்கம், பண வீக்கம் என பல பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் அதனை சரிசெய்ய அந்நாட்டு நிறுவ னங்கள் இந்தியச் சந்தையில் அதன் உற்பத்திப் பொருட்களை குவிக்கும். இதனால் இந்தியா வில் உள்ள சிறு, குறு உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கும். குறிப் பாக பாஜக அரசு சிறு குறு நிறுவனங்களின் பாது காப்பை உறுதி செய்யாத நிலையில் அவர்கள் பெரும் பாதிப்பை அடைவார்கள். இது இந்திய பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பி டத்தக்கது.

இந்தியாவுக்கு விசா தளர்வு இல்லை

 இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன் பேசிய ஸ்டார்மர் இந்தியாவுக்கான விசா விதிமுறைகளைத் தளர்த்தும் எண்ணம் பிரிட்டனுக்கு இல்லை என்று தெரி வித்துள்ளார். இந்தியத் தொழிலாளர்கள் அல்லது மாணவர்களுக்காக அதிக விசா வழிமுறை களை உருவாக்குவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறி விட்டார்.