டிஆர்இயூ 35ஆவது மண்டல மாநாடு சென்னையில் எழுச்சியுடன் தொடங்கியது
ரயில்வே தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் டிஆர்இயூ 35வது மண்டல மாநாடு சென்னையில் எழுச்சியுடன் துவங்கியது. சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு தலைவர்கள் ஏ.கே.பத்மநாபன்,அ.சவுந்தரராசன், ஜி.சுகுமாறன்,அ.ஜானகிராமன்,வி.அரிலால் மற்றும் பலர் மேடையில் உள்ளனர். (முதல் படம்) பொதுமாநாட்டில் பங்கேற்ற ரயில்வே தொழிலாளர்களின் ஒரு பகுதியினர்.
சென்னை, அக். 8- தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ) 35ஆவது மண்டல மாநாடு தோழர்கள் பாசுதேவ் ஆச்சார்யா, கே.வெங்கடேசன்,ஜி.அன்பழகன் நினைவரங்கில் ( சென்னை ஐசிஎப் அம்பேத்கர் அரங்கம்) புதனன்று (அக்.8) தொடங்கியது. பெரம்பூர் மெயின் கேட்டில் பேரணியை பொதுச்செயலாளர் வி.அரிலால் தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி கேரேஜ் ஒர்க்ஷாப், லோகோ வழியாக சுமார் 2 கி.மீ. விண்ணதிரும் முழக்கத்துடன் மாநாட்டு திடலை வந்தடைந்தது. திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட பொன்மலை தியாகிகள் நினைவு மாநாட்டு கொடியை சந்தான செல்வம் வழங்க ஜி.சுகுமாறன் பெற்றுக் கொண்டார். தஞ்சையில் இருந்து கொண்டு வரப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதியை சிவக்குமார் வழங்க ஆர்.இளங்கோவன் பெற்றுக் கொண்டார். நாகர்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகி கோலப்பன் நினைவு ஜோதியை ரவிக் குமார், பத்மகுமார் வழங்க அபிமன்யு பெற்றுக் கொண்டார். பாலக்காட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் உமாநாத் நினைவு ஜோதியை அனில் குமார், உதயசங்கர் வழங்க ஆர்.ஜி.பிள்ளை பெற்றுக் கொண்டார். வேலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகி பரமசிவம் நினைவு ஜோதியை ராஜா வழங்க சாம்பசிவம் பெற்றுக் கொண்டார். சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் அனந்த நம்பியார் நினைவு ஜோதியை பிஜு வழங்க வி.அரிலால் பெற்றுக் கொண்டார். பொதுமாநாடு மாநாட்டுக் கொடியை தலைவர் ஜி.சுகுமாறன் ஏற்றி வைத்து, பொது மாநாட்டிற்கு தலைமை தாங்கி னார். வரவேற்புக்குழு தலைவர், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் வரவேற்றார். சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேம லதா மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். டிஆர்இயூ கவுரத் தலை வர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்ம நாபன், மூத்த தலைவர் ஆர்.ஜி.பிள்ளை, பார்த்தசாரதி (அகில இந்திய ஓடும் தொழிலாளர் சங்கம்), ஜான்வின்செண்ட் (அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர் அசோசியேஷன்), கே.வி.ரமேஷ் (இந்தியன் ரயில்வே டெக்னிக்கல் சூப்பரவைசர்ஸ் அசோசி யேஷன்), மெக்கோல்ட் (ஐசிஎப் யுனை டெட் ஒர்க்கர்ஸ் யூனியன்), மாரிமுத்து (தென்னக ரயில்வே மாற்றுத்திறனாளி கள் ஊழியர் சங்கம் ), ரெஜி ஜார்ஜ் (அகில இந்திய அக்கவுண்ட்ஸ் ஊழியர் சங்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். செயல் தலைவர் அ.ஜானகி ராமன் பொது மாநாட்டை நிறைவு செய்து பேசினார். பிரதிநிதிகள் மாநாடு புதன்கிழமை மதியம் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தலைவர் ஜி.சுகு மாறன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வி.அரிலால் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஆர்.சரவணன் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு வட சென்னை மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி வாழ்த்திப் பேசினார். இதில் 650 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து இன்றும் (அக். 9) நடைபெறுகிறது.