வாய்ப்பு வாசல் - அமர்த்தியா
யு.பி.எஸ்.சி பொறியாளர்கள்(474) தேர்வு
குடிமைப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC), ஒன்றிய அரசுப் பணிகளுக் கான பொறியாளர்களையும் தேர்வு செய்கிறது. பொறியியல் பணித்தேர்வு மூலம் அந்தப் பணி நடைபெறுகிறது. தற்போது 474 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வந்துள்ளது. வயது வரம்பு - குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சமாக 30 வயதும் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு. கல்வித்தகுதி - பி.இ அல்லது பி.டெக் பட்டப்படிப்பை சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய பாடங்கள் ஏதாவதொன்றில் நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வு முறை - முதல்நிலைத் (Preliminary) தேர்வு மற்றும் முதன்மைத்(Mains) தேர்வு என்று இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 8, 2026 அன்று நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் தேர்வு நடத்தப்படும். முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, எந்தெந்தப் பணியிடங்கள் எந்தத் துறையில் உள்ளன என்பது அறிவிக்கையில் விரிவாகத் தரப்பட்டிருக்கிறது. கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கான இணைப்பு உள்ளிட்ட வற்றிற்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிட லாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி அக்டோபர் 16, 2025 ஆகும்.
இந்தியன் வங்கி அதிகாரிகள் (84)
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கிகள் தகவல் தொடர்பு, மேலாண்மை, தணிக்கை உள்ளிட்ட பாடங்களில் இளநிலை/முதுநிலைப் பட்டங்களைப் பெற்றிருப்பவர்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. 84 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். குறைந்தபட்சக் கல்வித்தகுதி, வயது வரம்பு, அனுபவம், விண்ணப்பிப்பதற்கான இணைப்பு உள்ளிட்டவற்றிற்கு www.indianbank.bank.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 13, 2025 ஆகும்.
போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் (1,588)
பயிற்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் விழுப் புரம், சென்னை, சேலம், மதுரை, கும்ப கோணம், திருநெல்வேலி மாவட்டங் களில் உள்ள பணிமனைகளில் தொழில் பழகுநர்(அப்ரண்டீஸ்) பயிற்சி வழங்கப்பட உள்ளது. பி.இ., பி.டெக் (பொறியியல்) மற்றும் கலை அறி வியல் பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 1,588 காலி யிடங்கள் உள்ளன. இது குறித்த முழு விபரங்களை அரிய www.nats.edu cation.gov.in என்ற இணையதளத் தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் நிரப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 18, 2025 ஆகும்.
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (GROUP V A)
மாநில அரசுப் பணியில் தொகுதி - V A பணிகளில் உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி/தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் இளநிலை உதவி யாளர் அல்லது உதவியாளர் பணியில் இருப்பவர்களைக் கொண்டு பணி மாறுதல் மூலமாக தெரிவிற்கு இணைய தள விண்ணப்பங்களை டி.என்.பி.எஸ்.சி. வரவேற்கிறது. இதற்கான அறி விக்கை வெளியாகியுள்ளது. தமிழ் மொழியில் தகுதி தேர்வர்கள் 01.08.2025 அன்று போது மான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும். பின்வரும் தகுதியைப் பெற்றிருக்கும் ஒருவர் தமிழில் போதிய தகுதி உடைய வராகக் கருதப்படுவார். பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில்/உயர்நிலைப் பள்ளிப்படிப்பில்/பட்டப்படிப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலைப் பள்ளிப் படிப்பு/பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையானக் கல்வித் தகுதியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இரண்டாம் நிலை மொழித் தேர்வில் (முழுத்தேர்வு) தமிழில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். தேர்வு முறை - இரண்டு பிரிவுகளாக எழுத்துத் தேர்வு நடைபெறும். தாள் ஒன்று பொதுத்தமிழ் தாளாகவும், தாள் இரண்டு பொது ஆங்கிலமாகவும் இருக்கும். விரிந்துரைக்கும் வகை விடை களாக இந்தத் தேர்வை எழுதவேண்டும். இரண்டு தாள்களுக்குமான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21, 2025 அன்று நடைபெறும். தேர்விற்கான விரிவான பாடத் திட்டம், காலியிடங்கள் பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. முழுமையான அறி விக்கையைப் பெற www.tnpscexams.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித்தேதி நவம்பர் 5, 2025 ஆகும்.