வானிடிந்து வீழினும் வழங்குக நீதியே! டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் நினைவுகளும் தேவையும்
“Fiat justitia ruat caelum” – வானமே இடிந்து விழுந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண் டும் என்ற குறிக்கோளை இதயத்தில் ஏந்தி இயங்கியது டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை. 134 ஆண்டு கால வரலாறு கொண்ட இந்தக் கல்லூரி வளாகம், தற்போது நீதிமன்றமாக மாற்றப்பட்டு செயல் பாட்டுக்கு வரவிருப்பது, முன்னாள் மாணவர்களாகிய எங்களின் நெஞ்சக்கூட்டில் கரைந்து போகாத கனவு களை நினைவுகளாகப் படரச் செய்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வளாகத்துக்குள் நுழைந்தபோது, அடர்ந்த மரங்கள், கானல் நீராய் மறைந்த பழைய இருக்கைகள், பிரமாண்டமான இரும்புக் கதவு தாங்கிய நுழைவு வாயில், உச்சியில் மிளிர்ந்த “Dr. அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி” பெயர் பலகையின் வெற்றிடம் எனப் பூகோள நிலையே மாறி இருந்தது.
நீளமான மர மேசைகள், அகலமான வகுப்பறைகள், கலைநயம் காட்டும் கண்ணாடி கதவுகள், நீண்ட பாராங்கல் படிக்கட்டுகள், நுட்ப மான இந்திய-பாரசீக கலை வடிவம் கொண்ட கட்டிடக் கூடார மேற்கூரைகள், கபடி மற்றும் கைப்பந்து விளையாடிய மைதானம், சிற்றுண்டி கொடுத்த கேன்டீன், நண்பர்களுடன் சண்டையிட்ட களங்கள், அறிவைச் செறிவாகக் கொடுத்த நூலகம் என அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டு விட்டன. இருப்பினும், அந்த செங்கட்டிடம் இன்றும் உறுதியுடன் நிற்கிறது.
போராட்டத்தால் பிறந்த வாய்ப்பு முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ரா மன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சுப்பாராவ், சாதாசிவம், முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் உட்பட எண்ணற்ற நீதிபதிகள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்பு அதிகாரிகள் எனப் பலரை உருவாக்கிய பெருமை இந்தச் சட்டக் கல்லூரிக்கு உண்டு. திடீரென 2002-ல் இங்கு சேர்க்கை நிறுத்தப் பட்டிருந்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்க ளின் கொள்கை முடிவுக்கு எதிராக, இந்திய மாணவர் சங்கம் (SFI) நடத்திய தொடர் போராட்டத்தின் விளை வாகவே மீண்டும் சேர்க்கை நடைபெற்று, 80 மாண வர்கள் கவுன்சிலிங் மூலம் இங்கு இடம் பெற்றோம். நுழைவுத் தேர்வு முறை நிறுத்தப்பட்ட பின், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடந்திருந்தால், என்னைப் போன்ற கிராமப்புற மாண வர்களுக்கு வழக்கறிஞர் பணி வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். நீதிமன்ற அருகாமை - சட்டக் கல்வியின் அடிப்படை மருத்துவக் கல்வி எப்படி மருத்துவமனையுடன் இணைந்திருக்க வேண்டுமோ, அதேபோல் சட்டக் கல்லூரியும் நீதிமன்ற வளாகத்தை ஒட்டி இயங்குவது சட்டக் கல்விக்கு மிக அவசியம். மும்பை, கொல் கத்தா, பெங்களூரு போன்ற பல மாநிலத் தலைநகரங்க ளில் உள்ள உயர் நீதிமன்றங்களின் அருகிலேயே சட்டக் கல்லூரிகள் இயங்குகின்றன. ஆனால், தமிழகத் தலைநகரில் அப்படி ஒரு ஏற்பாடு இல்லை. சென்னை போன்ற மாநகரத்தில் சட்டம் பயிலும் போதுதான், ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் முதல் தலைமுறை சட்ட மாணவர்கள் எளிதில் தங்குமிட வசதி, பகுதிநேர வேலைக்கான சூழல், போட்டித் தேர்வுக்குத் தயாராக நூலக வசதி மற்றும் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக இணை ந்து நடைமுறை அனுபவம் பெறும் வாய்ப்புகள் சாத்திய மாகின்றன. இந்தச் சூழல் இல்லாதபோது, கிராமப்புற மாணவர்கள் தலைநகரில் தரமான சட்டக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் அரு காமையில் கல்லூரி இயங்குவதன் மூலம், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை, சாட்சிப் பதிவு, குறுக்கு விசாரணை போன்ற நடைமுறைகளை மாணவப் பருவத்திலேயே ஒரு பயிற்சி மையம்போல் அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ள முடிந்தது. இதுவே சட்டக் கல்வியின் உண்மை யான நோக்கத்தை அடைய வழி வகுத்தது. மேலும், பெண் மாணவர்களுக்கு இது பெரும் நம்பிக்கையை யும், தைரியத்தையும் அளித்தது. கல்லூரி இட மாற்றத்தின் பின்விளைவுகள் ஆனால், கடந்த 2018 முதல் சட்டக் கல்லூரி திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டக் கல்லூரியை மீண்டும் சென்னைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் 2024-ல் தமிழக அரசுக்குப் பதிலளிக்க உத்தரவிட்டது. தற்போது இருந்த கல்லூரியும் உயர் நீதிமன்றத்தின் குற்றவியல் நீதிமன்றங்களாகச் செயல்படவிருப்பது வருத்தமளிக்கிறது.
உயர் நீதிமன்றத்தில் சிவில், கிரிமினல், ரிட் என அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும்போது, குற்றவியல் நீதிமன்றங்களை மட்டும் வேறு வளா கத்துக்கு மாற்றுவது, இளம் வழக்கறிஞர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். எந்தப் பின்புலமும் இல்லாமல் வரும் முதல் தலைமுறை வழக்கறிஞர் கள், இரண்டு வெவ்வேறு வளாகங்களுக்கு அலை வது தொழிலில் சமாளிக்க முடியாத சூழலை உரு வாக்கும். இது நீதி பரிபாலன நடைமுறையில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன் வழக்கறிஞர்கள் சங்கங்க ளுடன் எந்தவித ஆலோசனையும் செய்யப்பட வில்லை. உயர் நீதிமன்றக் குற்றவியல் நீதிமன்றங்களை மட்டும் வேறு இடத்திற்குக் கொண்டு வருவதென்பது, உயர் நீதிமன்றத்தையே இரண்டாகப் பிரிப்பதற்கான சூழலை உருவாக்கும். எது எப்படியோ, வானமே இடிந்தாலும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்ற நோக்கம் ஒருபோதும் நொடிந்து போகாமல் தொடரட்டும்!
