வேலூர் சிஎம்சியில் அமலாக்கத் துறை சோதனை
வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய சிஐஎஸ்எஃப் வீரர்கள் துணையுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தோட்டப் பாளையத்தில் உள்ள மருத்துவர்கள் தங்கும் விடுதியிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பணப் பரிவர்த்தனை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங் கள் கொள்முதல் தொடர்பாக அமலாக்கத் துறை விசா ரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக நெல்லை-தாம்பரம் இடையே இயக்கப்படும் ஒரு வழி சிறப்பு ரயிலில் கூடுத லாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தென் மாவட்டங்களி லிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் கூட்டம் அலை மோதி வருவதை கருத்தில் கொண்டு, ஜனவரி 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலியிலிருந்து தாம்பரத் திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண் 06178) இயக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், அடுத்த சில நிமிடங்களி லேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இதனால் முன்பதிவு செய்ய முடியாத பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பயணிகளின் அதீத தேவையைக் கருத்தில் கொண்டு, இந்தச் சிறப்பு ரயிலில் கூடுதலாக இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. நெல்லையில் இருந்து ஜன.18 அன்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக செல்லும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இமானுவேல் சேகரன் அரங்கம் இன்று திறப்பு
சென்னை, ஜன. 16- இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனாரின் உருவச்சிலையுடன் கூடிய அரங் கத்தை சனிக்கிழமை (ஜன.17) முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைக்கவுள்ளார். நண்பகல் 12 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரது சமூக பங்களிப்பினை போற்றும் வகையிலும், அவரது நூற்றாண்டையொட்டியும் பரமக்குடி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இந்த அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வருகிறது
சென்னை: கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இதனால் சனிக்கிழமை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
டிட்வா புயல் பாதிப்புக்கு ரூ.110 கோடி நிவாரணம் ஒதுக்கீடு
சென்னை, ஜன.16 - கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மொத்தம் ரூ.110 கோடியே 85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 55,681 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் 33 சத வீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதத்தால் 83,526 விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிவாரண விதிமுறை களின்படி, 33 சதவீதத்திற்கும் மேல் பயிர்கள் சேதம் அடைந்தால், பருவ மழை சார்ந்த பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.8,500, பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முதலமைச்சர் தலை மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 33 சதவீதத்திற்கும் மேல் பயிர் சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும், பாசன வகையைப் பொருட்படுத்தாமல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மானி யம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக நெல் பயிருக்கு பாசனம் உள்ளதா, இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப் படும். இந்த நிவாரண திட்டத்தின்கீழ், மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.94 கோடியே 28 லட்சத்து 62 ஆயி ரத்து 889, மாநில நிதியில் இருந்து ரூ.16 கோடியே 57 லட்சத்து 28 ஆயிரத்து 539 ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி மாவட்ட வாரியாக பயிர் சேதம் ஏற்பட்ட பரப்பளவு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயி கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து வழங்கப்ப டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.