tamilnadu

img

ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தல் சீர்திருத்தம் அவசியம்

ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தல் சீர்திருத்தம் அவசியம்

தேர்தல் ஆணையத்திடம் விரிவான கோரிக்கைகளை அளித்து எம்.ஏ.பேபி வலியுறுத்தல்

புதுதில்லி, மே 10 - ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தல் சீர்திருத்தம் அவசியம் என தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி நேரில் வலியுறுத்தினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்  குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு மற்றும் மத்திய செயற்குழு உறுப்பி னர் டி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் ஆணை யர்கள் மூவரையும் சனிக்கிழமை சந்தித்து, விரிவான தேர்தல் சீர்திருத்த முன்மொழிவுகளை வழங்கினர். தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, “அரசியல் கட்சிகளு டனான ஆலோசனை சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.  இது ஜனநாயகத்தை வலுப் படுத்தும்” என்று எம்.ஏ.பேபி குறிப்பிட்டார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய கோரிக்கைகள்

பகுதி விகிதாசாரப் பிரதிநிதித்துவம்:  2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெறும் 36.56 சத வீத வாக்குகளைப் பெற்று 240  இடங்களைப் பெற்றது. இதே போல், பல மாநிலங்களிலும் வாக்கு களுக்கும் இடங்களுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பதால், மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களுடன் கூடுதலாக 25 சதவீத இடங்களை விகிதாசார முறையில் நிரப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” எதிர்ப்பு: “இது அரசமைப்பின் ஜனநா யகம் மற்றும் கூட்டாட்சி கோட்பாடு களை சீர்குலைக்கும் முயற்சி” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நிதி சீர்திருத்தம்: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 93 சத வீதம் பேர் “கோடீஸ்வரர்கள்” என் பது சுட்டிக்காட்டப்பட்டு, தேர்தல் களுக்கு பகுதியளவு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், அர சியல் கட்சிகளின் செலவினங் களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: வாக்காளரின் தேர்வு முதலில் கட்டுப்பாட்டு அலகில் பதி வாகி, பின்னர் விவிபேட் (VVPAT)-க்கு  அனுப்பப்படும் வகையில் மாற்றி யமைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மின்னணு பதிவுகளை விவிபேட் (VVPAT) சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி: 2023ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழுவில் இருந்த இந்திய தலைமை நீதிபதிக்குப் பதிலாக “பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சர்” என மாற்றியது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள்: 2024 மக்களவைத் தேர்தலின் போது மதம் மற்றும் சாதி அடிப்படையில் பிரச்சாரம் செய்த தலைவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கா தது குறித்து கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. வாக்குப்பதிவு தரவுகள்: தேர்தல் முடிந்த உடனேயே படிவம் 17C இன் பகுதி 1-ஐ தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்களுடனான இச்சந்திப்பில், “இந்தியாவின் ஜன நாயகப் பயணத்தில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையும் நடுநிலைமையும் அவசியம். தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும்” என்று கட்சியின் பொதுச்செயலாளர்  எம்.ஏ.பேபி தெரிவித்தார்.