பழவேற்காட்டில் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அதிகாரிகள் விசாரணை
பொன்னேரி, ஜன.3- திருவள்ளூர் மாவட் டம், பொன்னேரி தொகுதி, பழவேற்காடு பகுதி யில் எஸ்ஐஆர் படிவம் விசாரணைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய சம்மன் குறித்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஜனவரி 3,4 ஆகிய நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1.1.2026 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங் களை அந்தந்த முகாம்க ளில் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் 2026ஆம் ஆண்டு ஜன வரி 1ஆம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்க ளையும் – வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும் – புதிதாக குடிபெயர்ந்த உள்ள வாக்காளர்களின் பெயர்களையும், புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; தொகுதி யிலிருந்து இடம்பெயர்ந்த வர்கள் மற்றும் இறந்த வர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு வீடுவீடாக சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். அவ்வாறு பழவேற் காடு பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட் பட்ட கரிமணல்,அரங்கம் குப்பம்,திருமலை நகர் உள்ளிட்ட பூத்களில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்கா ளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய சம்மன் குறித்து விசா ரணையை உதவி வாக்கா ளர் பதிவு அலுவலர் மற்றும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், மேற்பார்வையாளர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக நிலை-1 அலு வலர் பக்ருதீன் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் போது ஊராட்சி செயலர்கள்,வாக்குசாவடி நிலை அலுவலர்கள் உடனி ருந்தனர்.
