tamilnadu

img

எய்டு இந்தியா சார்பில் கல்வி உதவித்தொகை

எய்டு இந்தியா சார்பில் கல்வி உதவித்தொகை

எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கினார்

எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டையில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை வகித் தார். எய்டு இந்தியா  நிறுவனம் சார்பில் பட்டப்  படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் ஏழை  மாணவ, மாணவிகள் 5 பேருக்கு ரூ.1,57,000 மதிப்பிலான காசோலைகளை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், எய்டு  இந்தியா நிறுவனம் வறுமையில் வாடும் குடும் பங்களுக்கும், ஏழை, ஏளிய மாணவ, மாணவி களுக்கும் செய்துவரும் பணிகளைப் பாராட்டினார். மேலும், இந்த உதவித் தொகை மேற்படி மாணவர்களின் பெற்றோ ருக்கு பேருதவியாக இருக்கும் என சுட்டிக்  காட்டியதோடு, மாணவர்கள் சிறப்பாக படித்து எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும்” என்றார். நிகழ்வில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாண்டியன், ஜனநாயக மாதர் சங்க நகரச் செயலாளர் முத்துமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட இணை ஒருங்கி ணைப்பாளர் பிச்சம்மாள் நன்றி கூறினார்.