மத வெறுப்பாக மாற்றாதீர்கள்! ஆண்ட்ரியா கண்டனம்
மத வெறுப்பாக மாற்றாதீர்கள்! ஆண்ட்ரியா கண்டனம் காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங் கரவாத தாக்குதலை மத வாதமாக மாற்றாதீர்கள் என பாடகரும் திரை கலைஞருமான ஆண்ட்ரியா ஜெர்மி கண்டித்துள்ளார். அந்த தாக்குதல் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் பஹல்காமிற்கு நானும் சுற்றுலாப் பயணியாகச் சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்காக என் இதயம் துடிக்கிறது. அதே போல இந்த நிகழ்விற்குப் பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு, சோத னைக்கு உள்ளாக்கப்படவுள்ள காஷ்மீர் மக்களை நினைக்கையில் என் இதயம் உடைகிறது. நமது நாடு (மதரீதியாக) அதிகம் பிரித்து அணிதிரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூ கத்திற்கு எதிரான வெறுப்பாக இந்த பயங்கரவாதத் தாக்குதலை திசை திருப்பாமல் இருப்பது ஒரு குடிமக்க ளாக நமது கடமை. நான் என் கருத்தை அடிக்கடி சொல்ப வள் அல்ல. ஆனால் இந்த சூழலில் இதைச் சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடம் இல்லை. எனது பதிவின் பின்னூட்ட பகு தியிலும் இல்லை. நம் உலகிலும் இல்லை” என்று தனது கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தி ருக்கிறார்.