states

img

தாக்குதல் நடத்தியவர்கள் வரைபடம் வெளியீடு

தாக்குதல் நடத்தியவர்கள் வரைபடம் வெளியீடு

ஜம்மு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.   இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ- தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளன. இந்நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்கு தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் ஓவியங்களை (வரைபடங்களை) பாதுகாப்பு அமைப்புகள் புதனன்று வெளி யிட்டன.  அவர்கள் ஆசிப் ஃபௌஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா என்றும் அவர்கள்  மூன்று பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கள்தான் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ள னர் என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மூசா, யூனுஸ் மற்றும் ஆசிப் என்ற போலிப் பெயர்களைக் கொண்டிருந்ததாகவும் பூஞ்ச் பயங்கரவாத சம்பவத்திலும் அவர்க ளுக்கு தொடர்பு இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வரைபடங்கள்  உயிர் பிழைத்தவர்க ளின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். தூதரகம் மூடல்  இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.