பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வரும் குரல்களை முடக்க முயலும் கூட்டத்தினால் காஷ்மீர் தொடர்பான மோடியின் கொள்கையில் ஏற்ப்பட்ட தோல்விகளை மறைக்க முடியாது. ஒருதலைப்பட்ச சர்வாதிகார நடவடிக்கைகள் சாதாரண காஷ்மீரிகளை அந்நியப்படுத்தியது மட்டுமல்லாமல் பயங்கரவாதத்தின் தீப்பிழம்புகளை அணைக்கத் தவறிவிட்டது.
காங்.சமூக ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத்
பலரின் வாழ்க்கைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பாஜக அரசியல் செய்ய துவங்கிவிட்டது. ஒரு துயரத்தில் கூட அரசியல் செய்ய அலைபவர்கள் தான் இவர்கள்.
பத்திரிகையாளர் ராணா அயூப்
நேற்று இரவு முதல் செய்தி சேனல்களை பார்க்கிறேன். கோபத்தின் ஒவ்வொரு துளியும், நீதிக்கான ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானது. ஆனால் இந்த சம்பவத்திற்கு மோடி அரசிடம் நீங்கள் பொறுப்புக் கூறலைக் கோரவில்லை என்றால் நேற்று (ஏப்.22) படுகொலை செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட ஒவ்வொருவ ருக்கும் நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என அர்த்தம்.
திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா
வேறு நாடாக இருந்தால் உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள வேண்டும். உளவுத்துறை தோல்வி குறித்த கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் இங்கே கோடி மீடியா அவரை தெய்வமாக்குவதில் மும்முரமாக உள்ளன.