tamilnadu

img

வாய்ப்பு வாசல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 392 பணியிடங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், இருப்பிடப்பணி உதவியாளர், துப்புரப் பணியாளர், தோட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 392 காலிப் பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு : 18 முதல் 32 வரையில். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி தரப்படும். கல்வித்தகுதி : குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். அலுவலக உதவியாளர் மற்றும் இருப்பிடப்பணி உதவியாளர் ஆகிய இரண்டு பணிகளுக்கும் பணி அனுபவம் தேவை. இருப்பிடப் பணி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தமிழ்மொழித் திறனறிச் சோதனை, பொது அறிவு, வீட்டுப் பராமரிப்பு, உணவுத்தயாரிப்பு, அலுவலகப் பராமரிப்பு மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தும் திறன் ஆகியவை தொடர்பான வினாக்கள் இருக்கும்.  விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - மே 05, 2025 விண்ணப்பத்தை நிரப்பவும், கூடுதல் விபரங்களுக்கும் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு 400 காலிப்பணியிடங்கள்

இந்திய அணுசக்திக்கழகத்(NPCIL) தொழிற்சாலை மும்பையில் உள்ளது. இதில் பொறியியல் பட்டங்களைப் பெற்றவர்களைக் கொண்டு 400 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பிரிவுகளில் இந்தப் பணியிட நிரப்புதல் நடக்கவிருக்கிறது.  வயது வரம்பு : அதிகபட்ச வயது 26 ஆக இருக்க வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்ச்சி உண்டு.  கல்வித்தகுதி : பணியிடங்களுக்குப் பொருத்தமான பொறியியல் பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பாடப்பிரிவுகள் மற்றும் இணையான பாடப்பிரிவுகள் குறித்த விபரங்கள் இணையதளத்தில் உள்ள அறிவிக்கையில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.  தேர்வு முறை : கடந்த 3 ஆண்டுகளில், அதாவது 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் நடந்த GATE நுழைவுத் தேர்வுகள் ஏதாவதொன்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பெற்றவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். அதில் பெறும் மதிப்பெண்படி தேர்வு இருக்கும்.  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி தரப்படும். அப்போது மாதாமாதம் ரூ.74,000 உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சி நிறைவுக்குப் பிறகு நிரந்தரப்பணி தரப்படும். தகுதியானவர்கள் விண்ணப்பம் நிரப்பவும், கூடுதல் விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும் www.npcilcareers.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விணணப்பிக்கக் கடைசித் தேதி - ஏப்ரல் 30, 2025.

சமையல் உதவியாளர் பணி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 273 சமையல் உதவியாளர்(பெண்கள் மட்டும்) பணியிடங்களை நிரப்புகிறார்கள். 40 வயதுக்குட்பட்ட பத்தாம் வகுப்பு படித்தவர்கள் ஏப்ரல் 29, 2025 ஆம் தேதிக்குள் www.virudhunagar.nic.in என்று இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

என்.எல்.சி.யில்  171 பணியிடங்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறையைச் சேர்ந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Mining Engineering பாடத்தில் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு 171 பணியிட வாய்ப்புகள் வந்துள்ளன. கல்வித் தகுதி உள்ளவர்கள் www.nlcindia.in என்ற இணையதளத்தின் வாயிலாக மே 14, 2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.