states

img

காஷ்மீரைவிட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்

காஷ்மீரைவிட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்

முதல்வர் உமர் அப்துல்லா வருத்தம்

ஜம்மு காஷ்மீரின் பஹல் காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து எங்கள் விருந்தினர்கள் வெளியேறுவது மனதை வேதனை அடையச் செய்கி றது என முதல்வர் உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார். உமர் அப்துல்லா வெளி யிட்டுள்ள டிவிட்டர் எக்ஸ் பதிவில், பஹல்காமில் நேற்று (ஏப்.22 செவ் வாய்) நடந்த கொடூரமான பயங்க ரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு எங்களின் விருந்தினர்கள் வெளி யேறுகிறார்கள். இதனைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது.  ஆனாலும் மக்கள் ஏன் வெளி யேற விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம். கூடுதல் விமான சேவைகளுக்காக ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத்துறை  அமைச்சகம் பணியாற்றி வரும் நிலையில் ஸ்ரீநகர் - ஜம்மு இடை யேயான தேசிய நெடுஞ்சாலை 44 ஒருவழிப் பாதைக்காக திறக் கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே சுற்றுலா வாகனங்கள் வெளியேறு வதற்கான அனைத்து வசதிகளைச் செய்து கொடுக்கும்படி நான் எங்கள் அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளேன். இன்னும் சில இடங்க ளில் சாலைகள் உறுதி இல்லாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை  சற்று  கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஒருங்கிணைக்கப்பட்டதாகவுமே இருக்கும். ஆனாலும் போக்கு வரத்து நெரிசலில் சிக்கும் அனை த்து வாகனங்களும் வெளியே செல்ல நாங்கள் பணியாற்றுகி றோம்.  மேலும் தற்போதைய சூழ் நிலையில் வாகன இயக்கம் முழுவ தையும் சுதந்திரமாக அனுமதித்திட முடியாது. அனைவரும் எங்களு டன் ஒத்துழைப்பார்கள் என்று நம்பு கிறோம் என்றும்  தெரிவித்துள்ளார்.