tamilnadu

நெல் கொள்முதலை தனியார்மயமாக்காதே

சென்னை, பிப்.1-  நெல் கொள்முதலை தனியார்மய மாக்கும் ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து  பிப்ரவரி 8 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் சங் கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை, 1975 இல் துவங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. கொள் முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்வதற்கான நவீன அரிசி ஆலைக ளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தி வருகிறது.  இந்நிலையில் ஒன்றிய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணை யம் ( NCCF ) மூலம் நெல் கொள் முதல் செய்திட வேண்டுமென மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்திடும் வகை யில் நடப்பாண்டில் (2024-25) டெல்டா மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்திட மாநில அரசு அனுமதி வழங்கி யுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது.

ஊக்கத்தொகை  நிறுத்தப்படும் அபாயம் 

ஒன்றிய அரசு நிறுவனங்கள் மூலம் நேரடியாக நெல்கொள்முதல் செய் தால், மாநில அரசு வழங்கி வரும் ஊக் கத்தொகையையும் நிறுத்தி விடுவார் கள். இது விவசாயிகளை பாதிக்கும்.  கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணை யத்திற்கு அனுமதியளிப்பது நாள டைவில் நெல்கொள்முதலை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் முயற்சி யாகும்.  எனவே, தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதலை செய்திட வேண்டுமென்பதை வலியுறுத்தி பிப்ரவரி 8 ஆம் தேதி மாவட்ட  தலை நகரங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்குமாறும், பொதுமக்கள் ஆதரவளித்திடுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.