இயக்குநர் வி. சேகரின் மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பு!
சென்னை, நவ. 15 - திரைப்பட இயக்குநர் வி. சேகர் (72) வெள்ளிக்கிழமை (நவ.14) அன்று சென்னையில் காலமானார். இந்நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்ப ட்டிருந்த உடலுக்கு சனிக்கிழமை (நவ. 15) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின், பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எளிய மக்களின் வாழ்வி யலை திரைப்படமாக காட்சிப்படுத்திய இயக்குநர் வி.சேகர், 1996, 2002-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரைப்பட விருதுகளை பெற்றவர். தமுஎ கச உடன் நெருக்கமாக பயணித்தவர்” என்றார். மேலும்”வி. சேகரின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்லாமல், இடது சாரி கட்சிகளுக்கும் பேரிழப்பு. தன்னு டைய திரைப்படத்தின் வாயிலாக பொது வுடமை கருத்துக்களையும், சமத்துவம், சமூக நீதி, பெண்ணுரிமை கருத்துக்க ளை வலியுறுத்தியவர் வி. சேகர்” என்று கூறிய பெ. சண்முகம், “வி. சேகரின் அவ ரது பணி திரைப்பட வரலாற்றில் முத்திரை பதித்த ஒன்றாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். தமுஎகச அஞ்சலி தமுஎகச மாநில துணைத்தலைவர் சிகரம் ச. செந்தில்நாதன், துணைச் செய லாளர் கி. அன்பரசன், செயற்குழு உறுப்பினர் இரா. தெ.முத்து, மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் வெ. இரவீந்திர பாரதி உள்ளிட்டோ ரும் இயக்குநர் வி. சேகர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ச.செந்தில்நாதன் அளித்த பேட்டியில், “மக்கள் இயக்குநர் போற்றப்படும் சேகர், தமுஎகசவுடன் நெருக்கமாக இருந்தார். அவருடைய இழப்பு இடதுசாரிகள், முற் போக்கு எழுத்தாளர்கள், மனிதாபிமானி களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு” என்றார். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், இயக்குநர் வி. சேகரின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். வி. சேகரின் இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (நவ. 16) திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள நெய்வ னத்தம் கிராமத்தில் நடைபெறுகிறது.
