tamilnadu

img

தில்லி மாநில எல்லைப் பிரச்சனைகள் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது

தில்லி மாநில எல்லைப் பிரச்சனைகள் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது

தில்லி மாநில எல்லைப் பிரச்சனை களை குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஒன்றிய சட்டங்களின் கீழ் வரும் கடுமையான குற்றங்களில், மாநிலங்க ளுக்கு இடையேயான எல்லை மற்றும் அதிகார வரம்புச் சிக்கல்கள் விசாரணையைப் பாதிப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது தில்லி-என்சிஆர் பகுதி களில் செயல்படும் தொழில் ரீதியிலான  குற்றக் கும்பல்கள் மற்றும் கொடூரக் குற்றவாளிகள், மாநில எல்லைகளுக்கு இடையிலான சட்டச் சிக்கல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கின்றனர். ஒரு குற்றம் ‘எ’ என்ற மாநிலத்தில் நடக்கிறது, ஆனால் அதன் விசாரணை ‘பி’ அல்லது ‘சி’ மாநிலத்தில் நடை பெற வேண்டிய சூழல் உள்ளது. இத னால், எந்த மாநிலக் காவல்துறை அல்லது விசாரணை அமைப்பு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்? எந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண் டும்? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்தத் தெளிவற்ற நிலை இறுதி யில் அந்த குற்றவாளிகளுக்கு சாதக மாக அமைந்து விடுகிறது. இது சமூ கத்திற்கும் தேசத்திற்கும் நல்லதல்ல என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு கவலை தெரிவித்துள்ளது.