tamilnadu

சம்பா பயிர் காப்பீடு செய்ய நவ.30 வரை அவகாசம்

சம்பா பயிர் காப்பீடு செய்ய நவ.30 வரை அவகாசம்

சென்னை, நவ.16- சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கால  அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் தற்போது விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து  வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நாள் வரை 6.27 லட்சம் விவசாயிகளால் 15 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப் பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும். பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமத மானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா நெற்பயிர் காப்பீ ட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக் கைக்கிணங்க கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது. முதலமைச்சர் எடுத்த துரித நட வடிக்கையின் பேரில் சம்பா, தாளடி, பிசா னம் நெற்பயிர் செய்யும் விவசாயிகளின் நன்மையைக் கருதி பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 27 மாவட்டங்களில் இதுவரை சம்பா  நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயி கள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடை யுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.