tamilnadu

ஆந்திரா நோக்கி நகரும் மோந்தா புயல் காக்கிநாடா அருகே கரையை கடக்க வாய்ப்பு

ஆந்திரா நோக்கி நகரும் ‘மோந்தா’ புயல் காக்கிநாடா அருகே கரையை கடக்க வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வுப் பகுதி சனிக்கிழமை மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, நிலவரப்படி புயல் சின்னமானது சென்னை யிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 790 கிலோ மீட்டர் தொ லைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 850 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அக். 27 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மோந்தா புயலாக வலுவடையும்.  இந்த மோந்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்.28 ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம்-கலிங்கப் பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரை யைக் கடக்கக் கூடும். அப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வே கத்தில் தரைக் காற்று வீசக்கூடும். இதனால் வட தமிழகத்தில்  பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த  புயலால் ஒடிசாவுக்கு மிக கனமழை இருக்குமென வானிலை  ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.