ஹவானா, டிச.29- கியூபத் தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, அமெரிக்காவின் 65 ஆண்டுகால பொருளாதார தடை களுக்கு எதிராக தங்கள் கண்ட னத்தை பதிவு செய்தனர். கியூபப் புரட்சியின் மூத்த தலை வரும், முன்னாள் ஜனாதிபதி யு மான ஜெனரல் ரால் காஸ்ட்ரோ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் கேனெல் ஆகியோர் தலை மையில் நடைபெற்ற இந்த பேரணி, கடற்கரை சாலையான மலெகானில் துவங்கி அமெரிக்க தூதரகம் வரை சென்றது. “இது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு பேரணி. அமெரிக்க ஏகாதிபத்தியம் பலவந்தமாகவோ அல்லது இனி மையாகவோ கியூபாவை ஆக்கிர மிக்க முயற்சிப்பதை நாங்கள் எதிர்க் கிறோம். இப்போதும், எப்போதும்!” என பேரணிக்கு முன்னதாக ஜனாதி பதி தியாஸ் கேனெல் தெரிவித்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காலத்தில் கியூபா மீது 243 கடுமையான தடைகள் விதிக்கப் பட்டன. அதோடு, பயங்கரவாதத் திற்கு ஆதரவு தரும் நாடுகள் பட்டி யலில் கியூபாவும் சேர்க்கப்பட்டது. தற்போதைய பைடன் நிர்வாகமும் இந்த கொள்கைகளை தொடர் கிறது. “கியூபா மீதான குற்றச்சாட்டு பொய்யானது, அநீதியானது. கியூபா வுக்கு எதிராக பயங்கரவாத தாக்கு தல்களை நடத்த பல குழுக்கள் அமெ ரிக்காவிலேயே பயிற்சி பெறுகின் றன. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை,” என்று சாடுகிறார் தியாஸ் கேனெல்.
பொருளாதார தடைகளால் கியூப மக்கள் படும் துன்பங்கள்
அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதி - உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு - தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்கள் கிடைக்காத நிலை - வர்த்தக தடையால் பொருளா தார வளர்ச்சி பாதிப்பு கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட மருத்துவ ஆக்சிஜன் கிடைக்காமல் கியூப மக்கள் பெரி தும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த சூழ்நிலையிலும் கியூபா தனது சொந்த தடுப்பூசியை தயாரித்து உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. “அமெரிக்க மக்களுடன் நட்பு றவை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் மட்டுமே சாத்தியம். எந்த அச்சுறுத் தல்களுக்கும் கியூபா பணியாது. எங்கள் இறையாண்மையையும், சமத்துவ சமூக கொள்கைகளையும் எந்த விலை கொடுத்தும் பாதுகாப் போம்,” என ஜனாதிபதி தியாஸ் கேனெல் உறுதிபட தெரிவித்தார். இந்தியாவில், தமிழகத்தில் கியூப ஆதரவு இயக்கங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற கியூப புரட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் தமிழில் வெளிவந்துள் ளன. தமிழக மாணவர், இளைஞர் இயக்கங்களில் கியூப புரட்சியின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. அமெரிக்க தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக் கையை உலகெங்கிலும் உள்ள முற் போக்கு சக்திகள் முன்வைத்து வரு கின்றன. இந்த போராட்டத்திற்கு ஆத ரவாக குரல் கொடுக்குமாறு கியூப அரசு அனைத்து நல்லெண்ண சக்தி களையும் வேண்டுகிறது. (கிரான்மா)