india

img

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1.77 கோடி ஜிஎஸ்டி வசூல்!

2024 ஆண்டில் டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈட்டப்பட்ட ஜிஎஸ்டி வசூலில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ. 32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ. 1.65 லட்சம் கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டு ரூ. 1.77 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் வருவாய் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.82 லட்சம் கோடியாக (8.5% உயர்வு) இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 2024 ஏப்ரலில் ரூ. 2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.