states

img

பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரளாவை “மினி பாகிஸ்தான்” என இழிவுபடுத்தும் வகையில் பேசிய மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர அமைச்சரும், பாஜக மூத்த  தலைவருமான நிதேஷ் ரானே பேசுகையில், “கேரளா ஒரு மினி பாகிஸ்தான் ஆகும். மக்களவைத் தேர்த லில் தீவிரவாதிகளின் வாக்குகளால்தான் ராகுல் காந்தியும், பிரி யங்காவும் அங்கு வெற்றி பெற்றனர்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நிதேஷின் பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதனையடுத்து அவர் அளித்த விளக்கமும் கேரளாவை மீண்டும் அவமதிப்பதாகவே உள்ளது. இந்த நிலையில், நிதேஷ் ரானேவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே, கேரளாவை “மினி பாகிஸ்தான்” என இழிவுபடுத்தும் வகையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தீய நோக்கம் கொண்டது. 
மதச்சார்பின்மை, மத ஒற்றுமையின் வலுவான தளமாக விளங்கும் கேரளாவுக்கு எதிராக இத்தகைய வாய்ச்சவடால்கள் சங் பரிவாரத்தின் கேடுகெட்ட பிரச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. அனைத்து ஜனநாயக மதச்சார்பின்மை சக்திகளும் சங் பரிவாரத்தின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்துகிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.