tamilnadu

img

சிபிஎம் மாநில மாநாடு: வழிகாட்டி இணைய செயலி அறிமுகம்

மதுரை, ஜன. 1-   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாட்டில், தியாகிகள் நினைவாக ஏற்றப்படவுள்ள செங்கொடிப் பயணம் மதுரை வில்லாபுரம் தியாகி லீலாவதி நினைவிடத்திலிருந்து செவ் வாயன்று (டிச.31) மாலை புறப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.  பாலபாரதி, எஸ். கண்ணன், எம். சின்னத்துரை எம்எல்ஏ ஆகியோர் தலைமையிலான இந்த கொடிப்பயணக் குழு வெள்ளிக்கிழமை யன்று காலை, மாநில மாநாடு நடைபெறும் விழுப்புரம் மாநாட்டு அரங்கை அடைய உள்ளது. இந்நிலையில், கொடிப்பயணக் குழு விற்கு புதனன்று மதுரை புறநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாநகர்  செவ்வாயன்று இரவே கட்சியின் மதுரை  மாநகர் மாவட்டம் மேற்கு - 2ஆம் பகுதிக் குழு சார்பில் ஜீவாநகரில் வரவேற்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு செயலாளர் ஏ.எஸ். செந்தில்குமார் தலைமை யிலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பாலசுப்பிரமணியன், ஆர். சசிகலா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில், மாவட்டக்குழு உறுப் பினரும், மதுரை மாநகர துணைமேயரு மான தி. நாகராஜன் வரவேற்றுப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்க டேசன் எம்.பி. சிறப்புரையாற்றினர். மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புற நகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.சின்னதுரை எம்எல்ஏ, இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமயநல்லூரில் வரவேற்பு

அதைத்தொடர்ந்து, கே. பாலபாரதி, எஸ். கண்ணன், எம். சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் தலைமையிலான கொடிப் பயணக்குழு புதனன்று காலை சமயநல்லூர் வந்த நிலையில் அங்கு கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் வாணவேடிக்கைகளுடன், மேள தாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்தும் செவ்வணக்கம் செலுத்தியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் ம. தனபாலன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர்  கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், இரா. விஜயராஜன், எஸ்.  பாலா மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் புதனன்று பிற்பகல் திண்டுக்கல் பேகம்பூரில் சிஐடியு திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் ஏ. அரபுமுகமது வரவேற்றார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், ஜி. ராணி, டி. முத்துச்சாமி, பி. ஆஸாத், தா. அஜாய் கோஷ், கே.ஆர். பாலாஜி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முகேஷ், பாப்பாத்தி, பாக்கியம், கே.எஸ். கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் கே.எஸ். சக்திவேல், ஜி. கிருஷ்ணமூர்த்தி, மூத்த தலைவர் வ. கல்யாணசுந்தரம், ஒன்றியக் கவுன்சிலர் செல்வநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். ஒன்றியச் செயலாளர் ஆர். சரத்குமார் நன்றி கூறினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே. பாலபாரதி, எஸ். கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னத்துரை எம்எல்ஏ ஆகியோர் வரவேற்பை ஏற்றும், சிபிஎம் மாநில மாநாட்டின் கொள்கை முழக்கங்களை எடுத்துரைத்தும் உரையாற்றினர்.