tamilnadu

img

காலி மதுபாட்டில் திரும்பப் பெற மாற்றுத் திட்டத்தை உருவாக்குக!

காலி மதுபாட்டில் திரும்பப் பெற மாற்றுத் திட்டத்தை உருவாக்குக! தலைமை செயலகம் நோக்கி டாஸ்மாக் ஊழியர்கள் பேரணி

சென்னை, ஜன. 8 - காலி மதுபாட்டில் திரும்பப் பெறு வதற்கு மாற்றுத்திட்டத்தை உருவாக்க வலியுறுத்தி வியாழனன்று (ஜன.8) தலைமை செயலகம் நோக்கி டாஸ் மாக் ஊழியர்கள் பேரணி நடத்தினர். டாஸ்மாக் நிர்வாகம் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. கடையில் விற் பனையாகும் ஒவ்வொரு பாட்டில் மீதும் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி, வாடிக்கை யாளரிடம் கூடுதல் தொகையை வசூ லிக்க வேண்டும். வாடிக்கையாளர் காலி பாட்டிலை திருப்பி தரும்போது 10 ரூபாயை திருப்பி தர வேண்டும். அந்த காலி பாட்டில்களை சேகரித்து, ரகம் வாரியாக பிரித்து ஒப்பந்ததாரரிடம் கொடுக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் இந்த பேரணி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பா ளர் கே. திருச்செல்வன், “காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத் தால் ஊழியர்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. காலி பாட்டில்கள் அசுத்தமாக, சுகாதாரமற்று, நோய் தொற்றை உருவாக்கும் வகையில் உள்ளது. அவற்றை கையாள கையுறை கூட வழங்க மறுக்கின்றனர். இந்த திட்டத்தை கடை ஊழியர்  களை கொண்டு அமலாக்க நீதிமன்றம் கூறவில்லை. ஆனால், ஊழியர்களை மிரட்டி அதிகாரிகள் இந்த பணியை செய்ய வைக்கின்றனர். பணி நிரந்தரம், ஓய்வு வயது, மிகை நேர ஊதியம், சட்டவிரோத பணி நீக்கம் போன்ற வழக்குகளில் ஊழியர்களுக்கு சாதகமாக நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அவற்றை அம லாக்க மறுக்கின்றனர். காலி பாட்டில்களை சேகரித்து வைக்க இடம், கோணி, கையுறை போன்றவற்றை வழங்காமலும், உட்கட்டமைப்பை ஏற்படுத்தாமலும் ஊழியர்களை நிர்பந்திப்பது ஏற்க  முடியாது. இத்திட்டத்தை செயல் படுத்த தொழிற்சங்கங்கள் அளித்த மாற்று ஆலோசனைகளையும் நிர்வாகம் அமல்படுத்த மறுக்கிறது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து அடுத்தடுத்த போ ராட்டங்களை நடத்துவோம்” என்றார். பேரணியின் நிறைவாக நடை பெற்ற கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே. மகேந்திரன் மற்றும் பாரதி (எல்டியுசி), திலகர் (எஸ்சி/எஸ்டி சங்கம்) ராமசுந்தரம் (பாட்டாளி சங்கம்), தனபால் (ஏடிபி), ரத்தினம் (எல்எல்எப்), சதிஷ்குமார் (மேற்பார்வையாளர் சங்கம்) உள்ளிட்டு கூட்டமைப்பு சங்கத் தலை வர்கள் பேசினர்.