tamilnadu

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு சிபிஎம் கடும் கண்டனம் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு சிபிஎம் கடும் கண்டனம் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

கரூரில் பெ.சண்முகம் பேட்டி கரூர், டிச. 14 -   ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் பல்வேறு மக்கள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்தார். குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், தேசத் தந்தை மீதான பாஜகவின் வெறுப்பை வெளிப்படுத்து வதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.  கரூரில் டிசம்பர் 14 ஞாயிறன்று செய்தி யாளர்களைச் சந்தித்த தோழர் பெ. சண் முகம், ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்த மசோதாக்களில், கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MNREGS) மாற்றுவதற்கான முயற்சி மிகவும் ஆபத்தானது என்றார்.  மகாத்மா காந்தி பெயர் நீக்கமும் உரிமைப் பறிப்பும்  “இந்தச் சட்டத்தை மாற்றி, அதை ‘பூஜ்ய  பாபு சட்டம்’ என்று பெயரிட முடிவெடுத் திருப்பது, மகாத்மா காந்தி மீது ஒன்றிய அரசுக்கு உள்ள வெறுப்பை வெளிப்படுத்து கிறது. தேசத் தந்தையின் பெயரை ஒரு  திட்டத்திலிருந்து நீக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. எந்தவொரு ஆளும்  கட்சியும் தங்கள் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் திட்டங்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்ட தலைவர்களின் பெயரை மாற்றுவது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.  மேலும், இந்தச் சட்டத்தில் உள்ள ‘உத்தரவாதம்’ (Guarantee) என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வெறும் ‘வேலை வாய்ப்பு’ என்று மாற்றுகிறார்கள். இதன் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டப்படியான உரிமை பயனாளிகளிடம் இருந்து பறிக்கப் படுகிறது. “கோடிக்கணக்கான நூறுநாள் வேலைத் திட்டப் பயனாளிகளின் வயிற்றில் அடிக்கும் இந்தச் செயல் மூலம், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரா னவர்கள் நாங்கள் என்பதை பாஜக அரசு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது” என்று அவர் சாடினார். அத்துடன், இந்தத் திட்டத்தில் ஊழலுக்கான வாய்ப்புகள் இப்போது இல்லை. பணம் நேரடிப் பரி மாற்றம் மூலம் பயனாளிகளின் கணக்கிற்குச் செல்வதால், ஊழல் நடைபெறுவதாகக் கூறுவது பழைய கதையாகும் என்றும் சண்முகம் மறுத்தார்.  மின்சார சட்டம், விதைகள் சட்டம் ஆபத்தானவை புதிய விதைகள் சட்டம், மின்சாரச் சட்டம் 2025, பொதுக் காப்பீட்டுத் திட்டத்தில்  100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, அணுசக்தித் திட்டத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது போன்ற மக்கள் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு அவசர கதியில் கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  குறிப்பாக, மின்சாரச் சட்டம் நடை முறைக்கு வந்தால், தமிழ்நாட்டில் விவசாயி களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மானியம் ஆகியவை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு இந்தச் சட்டத் திருத்தத்தில் இருப்ப தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “விவ சாயம் கட்டுப்படியாகாத நிலையில், பாச னத்திற்கும் மின் கட்டணம் செலுத்த நேரிட்டால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, ஒன்றிய  அரசின் இந்த மக்கள் விரோத சட்டங் களுக்கு எதிராக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்” என்றும் அவர் வலி யுறுத்தினார்.  வெண்ணைமலை விவகாரத்தில் நீதிமன்ற அணுகுமுறைக்கு கண்டனம்  கரூர் வெண்ணைமலைப் பிரச்சனை யில் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறை யை விமர்சித்த அவர், அங்கு வாழும் மக்களின் கருத்தைக் கேட்காமல் நீதி மன்றம் தன்னிச்சையாகத் தீர்ப்பளித்தது இயற்கை நீதிக்கு முரணானது என்று குற்றம் சாட்டினார். சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரமாக இருக்கும் போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் உத்தரவை அமல்படுத்த மத்திய படையை  பயன்படுத்துவோம் என்று நீதிபதிகள் பகி ரங்கமாகக் கூறுவது அத்துமீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்தார். மாநில அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் இடையே ஒரு மோதல் போக்கை நீதிமன்றமே உரு வாக்குகிறது என்றார். மேலும், “வாழ்வுரி மையையும், வாழ்வாதாரத்தையும் பறிக்க அரசுக்கோ, நீதிமன்றத்திற்கோ உரிமை இல்லை” என்று சுட்டிக்காட்டிய அவர்,  வெண்ணைமலையில் மக்கள் குடியிருப்பு களுக்கு வரும் 18ஆம் தேதி சீல் வைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்  என்றும், மக்களின் குடியிருப்பு உரிமை யைப் பாதுகாக்கத் தமிழக அரசு வலுவான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  2026-இல் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்  தமிழகத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை முறியடிப்பது எங்கள் பிரதான கடமை. இந்த இலக்கை அடைய, தற்போதுள்ள அரசியல் சூழ லில், திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியே வலிமை வாய்ந்தது. எனவே, அந்த அணியில் சிபிஎம் போட்டியிடும் என்பதில் உறுதி யாக இருக்கிறோம்” என்று தெளிவு படுத்தினார். அதேவேளையில், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் மாநில அரசின் அணுகுமுறையில் மாறுபட்ட கருத்து இருந்தால், அதை வெளிப்படுத்து கிறோம், அது அணி மாறுவது என்று அர்த்த மில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பேட்டி யின் போது மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் எம்.ஜோதிபாசு உள்ளிட்டோர் உடனிருந்த னர்.                                   (ந.நி.)