tamilnadu

img

விவசாயம், கால்நடை, பால் உற்பத்தி, தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் புதுச்சேரியில் சிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு

விவசாயம், கால்நடை, பால் உற்பத்தி,  தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் புதுச்சேரியில் சிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி,ஏப்.5- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை (ஏப்.4) வெளியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை புதுச்சேரி மாநிலச் குழு அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.முருகன்  வெளி யிட, செயற்குழு சுதா சுந்தரராமன் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை செயலாளர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் பெரு மாள்  விளக்கிப் பேசினார்கள். இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் கள் கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, மாநிலக் குழு  உறுப்பினர்கள் ரமேஷ், நடராஜன் ஆகியோர் பங் கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இரண்டு பகுதிகள் உள்ளது. முதல் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டு கால  பா.ஜ.க-என். ஆர். காங்கிரஸ் ஆட்சி யாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளையும், செயல் படுத்திய  திட்டங்களையும் விமர்சனம் செய்திருக்கிறது. பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அதி காரத்திலிருந்து அகற்றப்படு வதற்கான காரணங்களை விளக்கி யிருக்கிறது. தேர்தல் அறிக்கையின்  முக்கிய அம்சங்கள்  முதன்மை ஆதாரத் துறையான விவசாயம், கால்நடை, பால் உற்பத்தி, மீன்பிடி மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயம் சார்ந்த பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைக ளுக்கு தேவையான பருத்தி, கரும்பு உற்பத்தி மற்றும் உணவுப் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவை யான நெல் மற்றும் சிறுதானிய உற் பத்தியை ஊக்குவிக்கப்படும்.  மது வணிகத்தை கட்டுப்படுத்து வதோடு புதிய மதுபான தொழிற் சாலைகள் மற்றும் ஐந்து ஆண்டு களில் வழங்கப்பட்ட ரெஸ்ட்டோபார், பப்புக்களுக்கான உரிமத்தை ரத்து  செய்ய வலியுறுத்தப்படும்.  வருமான த்திற்கு அதிகமாகச் சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள், அதி காரிகளின் சொத்துக்களைக் கண் காணித்து விசாரணைக்கு உட்படுத் தப்படும்.  அந்நிய மதுபான உற்பத் தியை அரசுப் பொறுப்பில் நேரடி யாக மொத்த கொள்முதல்  செய்து, சில்லரை வணிகத்திற்கு வழங்கு வதன் மூலம் வருவாயை பெருக்க நட வடிக்கை எடுக்கப்படும். ‘மாநிலத்தின் கலாச்சாரம், சுற்றுச் சூழல் மற்றும் பாரம்பரியத்தைப் பாது காக்கும் வகையில் பொருத்தமான சுற்றுலா வளர்ச்சி கொள்கை உரு வாக்கப்படும்.புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட ஒன்றிய அரசை வெகு மக்கள் போராட்டத்தின் வழியாக நிர்பந்திப்போம். 12-ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் கடன் வழங்கும் முறை கைவிடப்பட்டு, பொதுக்கணக்கு துவங்கி வெளிச்சந்தையில் கடன் பெறும் முறை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மீது திணிக்கப்பட்டன. 17.12.2007-ல் புதுச்சேரி பொதுக் கணக்கு தொடங்கிய போது நிலுவை யில் இருந்த மாநிலக் கடன் ரூ. 2177 கோடியை ரத்து செய்திட வலியுறுத்தப் படும். கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) சீர்குலத்திடும் ஒன்றிய அரசின் புதிய சட்டத்தினை ரத்து செய்து ஒன்றிய அரசின் முழு பங்களிப்புடன் 100 நாள் வேலை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க ப்படும். படித்து முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 10000 வழங்க வலியுறுத்தப்படும். அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்திட நல வாழ்வு உரிமை சட்டம் அமல்படுத் தவேண்டும். சுத்தமான குடிநீர் வழங்கலை அரசுப் பொறுப்பில் ஏற்று,  ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் நடவடிக்கை எடுக்கக்கோரு வோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தாய்வழி சாதி சான்றிதழ் வழங்கிட அனைத்து அட்டவணை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் பாகு பாடின்றி கல்வி உதவித் தொகை வழங்குவதை உறுதிசெய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.