தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீர்படுத்த சிபிஎம் கோரிக்கை
சிவகங்கை, டிச.31- தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை ஒழுங்குப் படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மின்வாரிய நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மானகிரி, மதுராநகர், செந்தில் ஆண்டவர் வீதிக்கு செல்லும் வழியில் மின்சார கம்பி தலையில் தட்டும் வகை யில் உள்ளது. இதுபோல் முருகன்கோவில், அனுமார் கோவில் வீதி களிலும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் ஏதும் சிக்காத வகையில் உடனடியாக தாழ்வாக செல்லும் மின்சார கம்பியை உயர்த்தி அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானகிரி கிளை மின் வாரிய நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
புதிரை வண்ணார் நலவாரிய சிறப்பு முகாம்
இராமநாதபுரம், டிச.31- புதிரை வண்ணார் இன மக்களின் சமூக மற்றும் பொரு ளாதார நிலையை மேம்படுத்தவும், அரசின் நலத்திட்டங் கள் அவர்களுக்கு முழுமையாக சென்று சேருவதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐபிஎஸ்ஓஎஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதிரை வண்ணார் இன மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த அடிப்படை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் மூலம், குறிப்பிடத்தகுந்த அள வில் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த பலரிடம் அர சின் நலத்திட்டங்களைப் பெற தேவையான சாதிச் சான்றி தழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள மற்றும் சட்ட ஆவணங்கள் இல்லாத தும், குடியிருப்பதற்கான வீடு இல்லாமலிருப்பதும், வசிக் கும் வீடுகளில் அடிப்படை சுகாதார வசதிகள் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட சேவைகள் புதிரை வண்ணார் சமூக மக்களிடம் எளிதில் சென்றடையும் வகை யில், இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, இராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்களம், கீழக் கரை ஊராட்சி ஒன்றியங்களுக்கு 3.1.2026 அன்று பட்டி ணம்காத்தான் பஞ்சாயத்து அலுவலகத்தில், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 3.1.2026 அன்று பொன்னையா புரம் சமுதாயக் கூடத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றி யத்திற்கு 5.1.2026 அன்று திருவெற்றியூர் சமுதாயக் கூடத்தில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஊராட்சி ஒன்றி யங்களுக்கு 5.1.2025 அன்று கடலாடி, கருங்குளம் சமு தாயக் கூடத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை கள் ஒருங்கிணைக்கப்பட்டு, தகுதியுடைய புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாதிச்சான்றி தழ், ஆதார் அட்டை, தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை எளிதில் பெற தேவையான வசதிகள் செய்து வழங்கப்படும். மேலும், வீடு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத தகுதியுடைய புதிரை வண்ணார் இனத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனா, கலைஞர் கனவு இல்லம் போன்ற வீட்டு வசதி திட்டங்க ளின் கீழ் முன்னுரிமை வழங்கி தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து புதிரை வண்ணார் இன மக்களும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் பயிற்சி மையத்தில் 50 பேர் ராணுவ வீரர்களாக தேர்வு
இராமநாதபுரம், டிச.31- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் பெரும் பாலும் விவசாயம் சார்ந்த கிராமங்களாக உள்ளன. ஆற்றுப்பாசன வசதி இல்லாத இப்பகுதிகளில் விவ சாயம் முழுமையாக மழையை நம்பியே நடைபெறுகிறது. நெல், கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு போன்ற தானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசா யம் கை கொடுக்காத காலங்களில் கரிமூட்ட தொழில் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று கூலி தொழிலா ளர்களாக வேலை செய்து மக்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், இப்பகுதியைச் சேர்ந்த பல இளை ஞர்கள் மற்றும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி பொரு ளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முதுகுளத்தூர் பகுதி இளைஞர்களுக் காக முன்னாள் ராணுவ வீரர்களான ராமர் மற்றும் கருப்ப சாமி ஆகியோர், இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்காக “பியூச்சர் டிபென்ஸ் அகாடமி” என்ற பெயரில் இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றனர். இந்த மையத்தில் உடற்தகுதி தேர்வு, விளையாட்டு தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட ராணுவத் தேர்வுகளுக்கான முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மையம் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 2025ஆம் ஆண்டு மட்டும் 82 பேர் ராணுவத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பயிற்சி பெற்ற 50 பேரில் 32 பேர் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். மீதமுள்ள 18 பேர் ராணுவ வீரர்களாகத் தேர்ச்சி பெற்று, பணிநியமனத்திற்கு தயாராக உள்ளனர். இதையடுத்து, முதுகுளத்தூரில் பாராட்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜசேகர், ஆசிரியர்கள் நவநீதன் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், கார்த்திகேயன், குமரேசன், ரம்யா, முன்னாள் ராணுவ வீரர்கள் போஸ், நாகமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற இளை ஞர்களை பாராட்டி வாழ்த்தினர்.
புத்தாண்டை முன்னிட்டு கீழக்கரை கடலோரத்தில் ரோந்துப் பணி தீவிரம்
இராமநாதபுரம், டிச.31- ஆங்கிலப் புத்தாண்டு நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படும் வேளை யில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. அதனொரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கட லோரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுப் பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் வனத் துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். கீழக்கரை கடல் மற்றும் தீவுப் பகுதி களில் தீவிரவாத ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல், வனவிலங்குகள் வேட்டையாடுதல் மற்றும் வனவிலங்கு பொருட்கள் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள் ளதா என்பதை கண்டறியும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதற்காக, கீழக்கரை வனச்சரக அலு வலர் சு.கௌசிகா தலைமையிலும், வன வர் ஆ.காளிதாஸ் முன்னிலையிலும் வனத் துறை குழுவினர் கடலோரப் பகுதிகள் முழு வதும் மற்றும் கடலுக்குள் சென்று ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். குறிப்பாக அப்பாத்தீவு, வாழைத்தீவு, முள்ளித்தீவு, யானைப்பார் தீவு, வாலி முனை தீவு உள்ளிட்ட பகுதிகளில் பாது காப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள் ளது. சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நிகழ்வும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் அளித்து, சட்டப்படி கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதி காரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கடலோர மற்றும் தீவுப் பகுதிகளில் அமைதி நிலவவும் இந்த ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பணிகளில் வனக்காப்பாளர்கள் ச.சோமுராஜ், செ.பிரபு, ச.முத்துக்குமார், வன காவலர் க.செல்வராஜ் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம் இராமநாதபுரத்தில் பிரச்சார இயக்கம்
இராமநாதபுரம், டிச.31- இராமநாதபுரத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பாக ஜனவரி 6 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட் டத்திற்கான பிரச்சார இயக் கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம், மாவட் டச் செயலாளர் அப்துல் நஜ் முதீன் ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற் றும் பரமக்குடியில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களிலும் ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெனிஸ்டர், பாலுச்சாமி, ரோஸனாரா பேகம், வினோதினி, வட்டார கிளை நிர்வாகிகள் மணிகண் டன், தன்வந்திரி, ரமா பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புகார்களை வாக்காளர்கள் கைபேசி மூலம் தெரிவிக்கலாம்
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு சிவகங்கை, டிச.31- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதல்களின் படி, 1.1.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தி யடைந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களது பெயரைச் சேர்ப்பதற்கும், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்குமான சிறப்பு வாக்கா ளர் பதிவு முகாம்கள் சிவகங்கை மாவட்டத் திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங் களிலும் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய நாட்களில் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, 3.1.2026 மற்றும் 4.1.2026 ஆகிய நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள தேசிய சுகாதார இயக்கத்தின் குழும இயக்குநர் அ.அருண் தம்புராஜ், 3.1.2026 அன்று நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை கண்காணிப்பதற்காக சிவ கங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார். அன்றைய தினம் நண்பகல் 12.30 மணி யளவில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அர சியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந் தாய்வுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவ லர்களுடன் ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட வுள்ளது. பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதி நிதிகள் ஆகியோர், வாக்காளர் பட்டியல் தொடர்பான தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை, மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அ.அருண் தம்பு ராஜை 73581 50776 என்ற கைபேசி எண்ணில் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை நகரில் பழுதான அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும்
நகர்மன்ற தலைவர் அறிவிப்பு சிவகங்கை, டிச.31- மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும் என நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தெரிவித்தார். மானாமதுரை நகர்மன்ற கூட்டம், நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன், நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், பொறியாளர் பட்டுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் காளீஸ்வரி, சதீஷ், புருஷோத்தமன், நவகோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்து களைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசின் ஆலோசனைக் குழு உறுப்பி னராகவும், மானாமதுரை நகர்மன்ற உறுப்பி னராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள புஷ்ப ராஜ் நன்றி தெரிவித்து பேசினார். நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென் னடி பேசுகையில், மானாமதுரை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடமும், காட்டு உடைகளம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடமும் விரை வில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், நகராட் சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் அதற் கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார். மேலும், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 510 சோலார் விளக்கு கள் அமைக்கப்பட்டுள்ளதில் 300 விளக்கு கள் பழுதடைந்துள்ளன. அவற்றை பழுது நீக்கம் செய்ய ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. சுந்தரபுரம் அக்ரஹாரம் பகுதி யில் உள்ள நகராட்சி பூங்கா ரூ.1.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. நக ராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1,255 தெரு விளக்குகள், 13 உயர் கோபுர விளக்குகள், வாரச்சந்தை கடைகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. விளக்குகள், பேருந்து நிலையம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் உள்ள மின் வசதிகளை சரிசெய்வதற்காக தேவையான மின் சாதனங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.
ரயில் மோதி முதியவர் பலி!
தூத்துக்குடி, டிச. 31 நாசரேத் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி முதியவர் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள தேமான்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு மகன் ஆறுமுகம் (68) இவர் புதனன்று காலை வயல் வேலைக்கு செல்வதற்காக நாசரேத் - ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நெல்லை ரயில்வே நிலைய இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு : 2 பேர் கைது
தூத்துக்குடி, டிச.31- தூத்துக்குடியில் வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் மசியன் மகன் ராஜேந்திரன் (33), ராம் கோபிசந்த் மகன் ஹேமந்த் (20) ஆகிய இருவரும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 1ஆவது தெருவில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். செவ்வாயன்று வேலை முடிந்து இரவு 7 மணி அளவில் அதே தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது பைக்கில் வந்த 2பேர் அவர்களை வழிமறித்துள்ளனர். அதில் ஒருவரை கல்லால் தாக்கி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் ஆய்வாளர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் தூத்துக்குடி வடக்கு சங்கரபேரியைச் சேர்ந்த கோட்டை கருப்பசாமி மகன் தண்டேஸ்வரன் (26), தேவர் காலனி 4ஆவது தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மாணிக்கராஜா (24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தேனி, டிச.31- தேவாரத்தைச் சேர்ந்த கஞ்சா சில்லறை வியாபாரி அஜித்குமார், சிலம்பரசன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். தேவாரத்தில் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வர் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர். இதில் தேவாரத்தை அஜித்குமார், சிலம்பரசன் ஆகி யோர் தொடர்ந்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா, தேனி மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டார்.
கீழே கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
இராஜபாளையம், டிச.31- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சோமியா புரம் தெருவைச் சேர்ந்தவர் ஷியாம்ராஜ் (40). இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இராஜபாளை யம் காந்தி சிலையிலிருந்து முடங்கியார் சாலை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது பிரபல வணிக நிறுவனம் முன்பு சாலையில் ஒரு தங்க கைசெயின் கிடந்தது. உரியவர் யார் என்பது தெரியாததால் அதை இராஜ பாளையம் தெற்கு காவல்துறையிடம் ஒப்படைத்தார். சிறிது நேரத்தில் தனது தங்க கைசெயின் காணவில்லை என்று செல்லம் வடக்கு தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (30) என்பவர் புகார் கொடுக்க இராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் வந்தார். பின்னர், உரிய அடையாளம் கேட்டு தங்க கைசெயின் தெற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஒப்ப டைக்கப்பட்டது. உரியமுறையில் காவல்துறையில் ஒப்படைத்த பொறியாளர் ஷியாம்ராஜை அனைவரும் பாராட்டினர்.
ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட கணவன் மனைவி மாயம் பேத்தி மீட்கப்பட்டார்
தேனி, டிச.31- கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட கணவன், மனைவியை தேடி வரு கிறார்கள். கூடலூர் அருகே லோயர் கேம்ப் எல்.எப் ரோடு பகுதி யைச் சேர்ந்த தம்பதியர் சங்கர் (55), கணேஸ்வரி (50 ). பால் மாடு வளர்த்து வருகின்றனர். இருவரும் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் புல் அறுத்துக் கொண்டிருந்தனர். மறுகரையில் இருந்த இவர்களது பேத்தி சஞ்சு(6) தன்னை அழைத்துச் செல்லு மாறு சத்தம் போட்டுள்ளார். மறுகரைக்கு சென்ற சங்கர் பேத்தியை தோளில் சுமந்து கொண்டு மீண்டும் ஆற்றைக் கடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது ஆற்றின் வேகத்தில் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். பதறிப் போன கணேஷ்வரி ஆற்றில் இறங்கி அவர்களை மீட்க முயன்றார். இதில் அவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்த மதுரை கூட்டு குடிநீர் திட்ட ஊழியர் சஞ்சுவை மீட்டார். இந்நிலையில் சங்கரும், கணேஷ்வரியையும் மீட்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து பெரியாறு அணை யில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப் பட்டு தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இலுப்பையூரணியில் அரசு வழங்கிய வீட்டுமனைகளை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
தூத்துக்குடி, டிச.31- கோவில்பட்டியில் தமிழக அரசு வழங்கிய வீட்டுமனைகள் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டு மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணி ஊராட்சியில் தமிழக அரசு 118 பேருக்கு இலவச வீட்டு மனைகளை வழங்கி உள்ளது. அந்த நிலத்தை கோவில்பட்டி வட்டாட்சியர் அளந்து கல் நாட்டிய பிறகு தனிநபர் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருவதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்து பட்டாக்களை பெற்ற பயனாளர்கள் சென்ற போது தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டி விரட்டு வதாகவும், எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளை அளவீடு செய்து கல் நாட்டப்பட்ட இடங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதில் நிலப்பட்டா பெற்ற பயனாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.