கொடைக்கானல் பூம்பாறையில் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு பழனி ஒன்றியத்தில் இன்று முதல் பிரச்சாரத்தை சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி துவங்குகிறார்
கொடைக்கானல், ஏப்.5- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி க்கு ஞாயிறன்று கொடைக்கானல் பூம்பாறையில் திமுக மேல்மலை ஒன்றியச் செயலாளர் சுரேஷ் பாண்டி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலை வர்கள், தொண்டர்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இன்று முதல் சுற்றுப்பயணம் பழனி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் என்.பாண்டி திங்களன்று (ஏப்.6) பழனி ஒன்றியப் பகுதியில் வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணத்தை துவக்குகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலை வர்கள், தொண்டர்களுடன் திங்கட் கிழமை மாலை 4 மணியளவில் கோம்பைப்பட்டி மூலக்கடையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத் திற்கு வாக்கு கேட்டு பயணத்தை என்.பாண்டி துவக்குகிறார். கோம்பைப்பட்டி மூலக்கடை, கோம்பைப்பட்டி, பச்சளநாயக்கன் பட்டி, டி.கே.என்.புதூர், பொன்னாரம், ஓபுளாபுரம் காளியம்மன் கோவில், குயவர் தெரு மணியக்கார தெரு, அரிசி ஆலை திடல், தெற்கு பள்ளி வாசல் வார்டு 9,10,11, பேரூராட்சி அலு வலகம் பின்பு வார்டு 8,9, சந்தை பேட்டை, பழைய ஆயக்குடி மூலக்கடை வார்டு 1,3, பழைய ஆயக்குடி காளியம்மன் கோவில் திடல் வார்டு 2, அண்ணா நகர் வார்டு 18, பாரதி கலையரங்கம், நந்த வனப்பட்டி, குறிஞ்சிநகர், தமிழ்நகர், பெரியப்பா நகர், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் திங்களன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
