tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு சிறப்பு மலர் வழங்கல்

சிபிஎம் அகில இந்திய  மாநாட்டு சிறப்பு மலர் வழங்கல்

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரை, மூத்த பத்திரிகையாளர் என். ராம் அவர்களை நேரில் சந்தித்து, மத்தியக் குழு உறுப்பினர் என். குணசேகரன் மற்றும் வீ.பா.கணேசன் ஆகியோர் வழங்கினர்.

மே 18 வரை கனமழை பெய்யும்

சென்னை, மே 14 - மே 15 அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 16 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.