மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில், ஏப்ரல் 2 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்காகவும், கட்சியின் வளர்ச்சி நிதியாகவும், கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் ரூ. 4 லட்சத்து 52 ஆயிரத்து 200, மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரனிடம் வழங்கப்பட்டது. இதில் சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மூத்தத் தலைவர் பி. இளம்பரிதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.