tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு

அமெரிக்க ஏகாதிபத்தியம் அமைதியை சீர்குலைக்கும் போது, இந்திய அரசாங்கம் மவுனம் காக்கிறது. இது டிரம்ப் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளிப்பதாகவே அமையும். அமெரிக்க ஆக்கிரமிப்பை இந்திய அரசாங்கமும், பிரதமர் மோடியும் கண்டிக்க வேண்டும்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

மும்பை மாநகராட்சித் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியின்றி 68 வார்டுகளில்  வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய போட்டியற்ற வெற்றிகள் “ஜென் இசட் (இன்றைய இளைஞர்கள்)” மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குரிமையை நடைமுறையில் பறிக்கின்றன. அதனால் இதனை ரத்து செய்ய வேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் உசேன் தல்வாய்

பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு மும்பையில் அரசு பேருந்துகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. அவை எங்கே சென்றன? இன்று ஒரு பேருந்தைப் பிடிக்க மக்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வீடுகள் பெரும்பாலும் பணக்காரர்களுக்காகவே கட்டப்படுகின்றன. ஏழைகளுக்கு வீடுகள் எங்கே?

அமெரிக்க ஜனநாயகக் கட்சி தலைவர் கமலா ஹாரிஸ்

வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது நடவடிக்கையானது, போதை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதல்ல. எண்ணெய் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் டிரம்ப்தான் வலுவான தலைமை என்பதைக் காட்ட நடத்தப்பட்டது.