tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம்

மேற்குவங்கத்தில் உருவாகி வரும் புதிய அரசியல் போக்குகளுக்கு ஏற்ப ஆம் ஜனதா உன்னயன் கட்சியுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திரிணாமுல் மற்றும் பாஜக  ஆகிய கட்சிகளுக்கு எதிராக ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒன்றிணைத்து ஒரு விரிவான கூட்டணியை உருவாக்குவதே எங்கள் இலக்கு.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் மாநிலங்களவை தேர்தலில் கிடைத்ததோ 28 வாக்குகள் மட்டுமே. இது எப்படி நடந்தது? குதிரை பேரம் என்று பாஜகவை குறை சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் தலைமை இதனைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

ஒரு நாட்டில் உள்துறை அமைச்சரின் முதன்மைப் பொறுப்பு சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதாகும். ஆனால் ஊடுருவல்காரர்கள் நாட்டுக்குள் இருக்கிறார்கள் என்று அமித் ஷா கூறுகிறார். 10 ஆண்டுகாலத்தில் அமித் ஷா இருக்கும் போதே எப்படி வந்தார்கள்? இது அமித் ஷா அமைச்சகத்தின் பெரும் தோல்வியையே காட்டுகிறது.

போப் லியோ

ஈரான் போரில் வெற்றி பெற அமெரிக்க மக்கள் தினமும் இயேசுவிடம் பிரார்த்திக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஹெக்ஸெத் கூறியுள்ளார். ஆனால் பிறரை ஆதிக்கம் செலுத்தும் ஆசையை விடுத்து, பிறருக்கு எப்படி வாழ்வளிப்பது என்ற நோக்கமே இயேசுவின் கொள்கை ஆகும்.